Become Famous On Social Media: சோஷியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்பது உங்களின் இலட்சியமா? ஆசையா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
சமூக வலைதளத்தில் பிரபலமாக எளிய வழிகள் என்னவென்று இப்பதிவில் நாம் காணலாம்.
டிசம்பர் 17, சென்னை (Technology News): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். சிலரோ லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளத்தில் (Social Media) பிரபலமாக எளிய வழிகள் என்னவென்று இப்பதிவில் நாம் காணலாம்.
சமூக வலைதளத்தில் பிரபலமாக எளிய வழிகள்:
துறையை தேர்ந்தெடுங்கள்:
உங்களுக்கு தெரிந்த, பிடித்த மற்றும் ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து அதில் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக உங்களுக்கு சிறந்த பேச்சாற்றல் உள்ளது என்றால் புது புது கண்டன்டுகளை எடுத்து அதை பேசி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இது போல நடிப்பு, சமையல், இசை, தோட்டக்கலை, விலாக் என திறமையான துறையை தேர்வு செய்து பதிவேற்றலாம். சிலர் சாப்பாட்டுகளை சாப்பிட்டு பதிவேற்றும் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு பெறுகிறது. Ambani, Adani Net Worth Drops: படுமோசமான நஷ்டத்தைக் கண்ட அம்பானி, அதானி.. ப்ளூம்பெர்க் லிஸ்டில் இருந்து வெளியேற்றம்..!
உண்மையாக இருங்கள்:
நீங்கள் போடும் கண்டண்டில் உண்மைத்தன்மை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பொய்யாக ஒரு கண்டண்ட் செய்து போட்டு அதிக ரீச்களைப் பெற்றதால் அதையே தொடர்ந்து போட்டால் அது ரீச்சும் ஆகாது. இதனால் உங்கள் இமேஜ் தான் ஸ்பாயில் ஆகிவிடும். இதனால் சமூகத்திடமிருக்கும் உங்கள் மதிப்பை இழக்க நேரிடும். மேலும் நீங்கள் போடும் போஸ்ட்கள், உங்கள் பார்வையாளர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது மற்றவர்களிடமிருந்து பாரட்டைப் பெற்றுத் தருவதுடன் மதிப்பையும் அளிக்கும்.
நிலைத்த செயல்பாடு:
எவ்வளவு சிறந்த கருத்துகளாக இருந்தாலும் சரி அதை தினமும் செய்து வர வேண்டும். அப்போது தான் எப்போதும் உங்கள் ஆடியன்ஸ் மனங்களில் இருப்பீர்கள். எப்போதும் மக்கள் பொழுதுபோக்கிற்கு எதாவது தேடிக் கொண்டே இருப்பர். அவர்களின் பசிக்குத் தீனி அளிக்கும் விதத்தில் உங்கள் கண்டன்ட் இருக்க வேண்டும். தினமும் வீடியோக்களை பதிவேற்ரம் செய்து வர வேண்டும். உங்கள் ஆடியன்ஸை எப்போதும் எண்டர்டெயின் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கண்களை கவர வேண்டும்:
எத்தனை வீடியோக்கள் போட்டால் அதிகளவில் ரீச் இல்லாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் வீடியோவில் நல்ல தரத்தில் இருந்திருக்காது. பார்க்க கண்களை கவரக் கூடிய வீடியோக்கள் மட்டுமே அதிகளவில் ட்ரெண்டாகிறது. உங்களை அழகாகவும், நல்ல திறமையாகவும் காட்டிக் கொள்ளவேண்டும். உங்களுக்க்யு அளிக்கும் முக்கியத்துவத்தை வீடியோக்களுக்கும் அளிக்க வேண்டும். மக்களுக்கு பிடிக்கும் விதத்தில் பல புதுமைகளை புகுத்தி நவீன விதத்தில் எடிட்டிங், கிராஃபிக் டிசைனிங் போன்றவை இருக்க வேண்டும். Bosch Layoffs: தொடரும் லேஆஃப் நடவடிக்கைள்.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போஸ்ச் நிறுவனம்..!
கோ வித் அ டிரெண்ட்:
டிரெண்டுகளுக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சமூக வலைதலத்தில் பிரபலாமாக வேண்டும் என்றால் டிரெண்டாகும் வீடியோக்களை போன்று உங்கள் தனித்துவத்துடன் செய்து வெளியிடுகையில் அனைவரையும் அது ஈர்க்கும். உங்கள் ஃபாலோவர்ஸையும் ஏற்ற உதவும். மேலும் புதிதாக ஏதவது கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால் அதற்காக சிறப்பு வகுப்புகளுக்குச் சென்றாவது கற்றுக் கொள்ளவது அவசியம்.
இண்டர்அக்ஷனின் பங்கு:
உங்களின் கண்டன்ட்களுக்கு மக்கள் கமெண்ட், மெசேஜ் செய்கையில் ரிப்லே செய்வது அவசியமாகும். அவர்கள் குறைகள் சொன்னாலும் அதை சரி செய்யதாக கூற வேண்டும். மேலும் அவரிகளி சப்போர்ட் உங்கலுக்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் கனிவாக வீடியோவில் சொல்ல வேண்டும். உங்களை பின் தொடர்பவர்களுக்கு உண்மையாக இருக்க நினைக்க வேண்டும்.
அதிகரிக்கும் கோலப்ரேஷன்:
ஃபாலோவர்ஸை அதிகரிக்க தற்போது பல சமூகவலைதள பிரபலங்களும் பின்பற்றும் வழிமுறை இது தான் கோலப்ரேஷன். இதில் பிறருடன் கலந்து கண்டண்ட் உருவாக்கி பதிவிடுகையில் ஃபாலோவர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதில் ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸையும் மட்டும் ஈர்க்கவும் முடியும். இதில் கம்பனிகள், பிராண்டுகள் அல்லது உங்களை போன்ற கிரியேட்டர்கள் உடனும் சேர்ந்து கோலாப் செய்யலாம்.