Samsung Music Frame: என்னது போட்டோவில் ஸ்பீக்கரா?! சாம்சங் மியூசிக் ஃபிரேம் வெளியீடு..!
தற்போது சாம்சங் மியூசிக் ஃபிரேம் சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது.

ஜூன் 25, புதுடெல்லி (New Delhi): போட்டோ ஃபிரேம் டிசைனில் மிரளவிடும் ஸ்பீக்கரை, ஒன் ரிமோட் மற்றும் ஆப் கன்ட்ரோல் சப்போர்ட் உடன் சாம்சங் மியூசிக் ஃபிரேம் (Samsung Music Frame) சவுண்ட்பார் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த சாம்சங் மியூசிக் ஃபிரேம் மாடலின் விலை ரூ.29,990ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் வெறும் ரூ.23,990 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். Maharashtra Swine Flu: மகாராஷ்டிராவில் பரவும் பன்றிக்காய்ச்சல்.. 15 பேர் பலி.. இந்த பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?.!
சிறப்பம்சங்கள்: இந்த மியூசிக் ஃபிரேம் மூலம் 120W ஆடியோ அவுட்புட் கிடைக்கும். இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 6 ஸ்பீக்கர்கள் வருகின்றன. தெளிவான குரல் தழுவலுக்கான ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிஃபையர், தடையற்ற ஆடியோ பிரதிபலிப்பிற்கான டப் சவுண்ட், ஆர்ட் பேனல் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன. சாம்சங் சவுண்ட் பார்களில் வரும் கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் வருகிறது. இதுவொரு வைடு ஸ்வீட் ஸ்பாட் (Wide Sweet Spot) ஆடியோ அவுட்புட் மாடலாகும். இது பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)