
மார்ச் 23, ஹைதராபாத் (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சல்மான் கான், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். ரூ.400 கோடி செலவில் உருவாகிய சிக்கந்தர் (Sikandar 2025 Film) திரைப்படத்தை சஜித் நாடியவாளா தயாரித்து வழங்கி இருக்கிறார். திரு ஒளிப்பதிவாளராகவும், விவேக் ஹர்ஷன் எடிட்டராகவும் பணியறியுள்ளனர். இசையமைப்பு பணிகளில் ப்ரீதம் பின்னணி பாடல், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசைக்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். Thug Life: தக் லைஃப் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு.. முதல் பாடல் அப்டேட் இதோ.. மிரட்டும் இசை.!
ட்ரைலர் வெளியானது:
படத்தில் சல்மான்கான், ரஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஷி கிஷோர் உட்பட பலரும் நடித்துள்ளனர். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், 2025 மார்ச் 30 அன்று வெளியாகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 5000 திரையரங்கில் சிக்கந்தர் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், இன்று படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியீடு தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சல்மான் கான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ட்ரைலர் வெளியானது: