அக்டோபர் 24, வளசரவாக்கம் (Cinema News): தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்தவர் சபேஷ் (MC Sabesan). இவர் பிரபல இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் இளைய சகோதரர் ஆவார். தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர், சென்னையில் நேற்று (அக்.23) மதியம் சுமார் 12:15 மணியளவில் காலமானார். தனது 68வது வயதில் அவரின் உயிர் பிரிந்தது. மறைந்த சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். சபீஸுக்கு கீதா, அர்ச்சனா என்ற 2 மகள்கள், கார்த்திக் என்ற மகன் இருக்கின்றனர். சபேசின் மனைவி தாரா ஏற்கனவே இறந்துவிட்டார். மறைந்த சபேசின் உடல் இறுதி சடங்குக்காக வளசரவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று மாலை 3 மணியளவில் பிருந்தவனம் இடுகாட்டில் இறுதி காரியங்கள் நடைபெறுகின்றன. Manorama Son Bhoopathi: மறைந்த நடிகை ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி காலமானார்; திரையுலகினர் சோகம்.!
சபேஷ் - முரளி கூட்டணி:
1990 காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர் சபேஷ் 23 படங்களுக்கு தம்பி முரளியுடன் சேர்ந்து இசையமைத்து இருக்கிறார். 1983ல் கீபோர்டு மட்டும் வாசித்த சபேஷ், பின்னாளில் அனைத்தையும் கற்றுக்கொண்டார். ரஜினிகாந்தின் மெகாஹிட் திரைப்படங்கள் என வருணிக்கப்படும் அண்ணாமலை (1992), பாட்ஷா (1995), அருணாச்சலம் (1997) ஆகிய படங்களுக்கு இவர்கள் பின்னணி இசையை திறம்பட மேற்கொண்டு இருந்தனர். ரஜினியின் ட்ரேட்மார்க் அடையாளமாக இன்று வரை கவனிக்கப்படும் சூப்பர் ஸ்டார் டைட்டில் இசையை ஜேம்ஸ்பாண்ட் இசையை போல தனித்துவமாக மெருகேற்றி உருவாக்கி இருந்தனர்.
சகோதரரின் மறைவு குறித்து தேவா உருக்கம்:
#WATCH | “எனக்கு ஒரு கையை காணவில்லை..”
-சபேஷ் முரளியின் உயிரிழப்பு குறித்து இசையமைப்பாளர் தேவா உருக்கமான பேட்டி#SunNews | #Deva | #Chennai | #SabeshMurali pic.twitter.com/PLXcJwVafz
— Sun News (@sunnewstamil) October 23, 2025
சித்தப்பா சபேசன் மரணத்தால் சோகத்தில் ஸ்ரீகாந்த் தேவா:
அப்பா ரொம்ப உடைஞ்சிட்டாரு.. என்னோட குருவை இழந்துட்டேன்.. இப்போ வந்த டியூட் படத்துல கூட அவரு பாடுன பாட்டு வந்துருக்கு - தனது சித்தப்பா சபேஷ் பற்றி மனமுடைந்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா#Chennai | #MusicDirectorSabesh | #RIP | #MusicDirectordeva | #SriKanthDeva | #PolimerNews pic.twitter.com/31RUxdxkOb
— Polimer News (@polimernews) October 24, 2025