Samsung Galaxy M36 5G (Photo Credit: @AjinkyaBho50496 X)

ஜூன் 27, சென்னை (Technology News): சாம்சங் நிறுவனம் புதிய சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36) ஸ்மார்ட்போனை இன்று (ஜூன் 27) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் மொபைல் பிரியர்களுக்காகவே மிட் ரேஞ்ச் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி அம்சங்கள் மற்றும் அதன் விலை குறித்த விவரங்களை இப்பதிவில் பார்ப்போம். Oakley Meta HSTN: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கிய மெட்டா ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி.. விபரம் இதோ.!

விலை:

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன், ரூ.16,499 பட்ஜெட் விலையில் அறிமுகமாகிறது. அமேசான் ஆன்லைன் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

சிறப்பம்சங்கள் (Samsung Galaxy M36 5G Specifications):

  • One UI 7 சார்ந்த ஆன்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன், சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் வந்துள்ளது. இதில், 6.6-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியும் உள்ளது. எக்ஸிநோஸ் 1380 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கேமராவை பொறுத்துவரை, 50எம்பி பிரைமரி + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் உள்ளது. செல்பிக்கு 13எம்பி கேமராவுடன், 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
  • அதேபோல், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், கூடுதலாக மெமரி கார்டு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போனில், 6000mAh பேட்டரி வசதியுடன், 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன.