அக்டோபர் 18, சென்னை (Festival News): இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகை (Diwali Festival) இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இப்பண்டிகை இருளை அகற்றி தீமையை வெல்வதை உணர்த்துகிறது. தீபாவளி என்பது 'தீபங்களின் வரிசை' என பொருள் தருகிறது. தீமை எனும் இருளை நீக்கி, நன்மை எனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளியின் உண்மையான பொருளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்த செய்தித்தொகுப்பில் தீபாவளியன்று சாப்பிடும் வகையில் 30 நிமிடத்திற்குள் செய்யும் மைசூர் பாக் மற்றும் தேங்காய் பர்ஃபி குறித்து காணலாம். இதனை நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக செய்து சாப்பிடலாம். Deepavali 2025: தீபாவளியில் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. மகிழ்ச்சி பெருக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்.!
மைசூர் பாக் (Mysore Pak) செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை மாவு - 2 கப்
- சர்க்கரை - 4 கப்
- நெய் - 1 கப்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட கடலை மாவை பொன்னிறமாகும் வரை வறுத்து அதனுடன் எண்ணெய் சேர்த்து கட்டியின்றி கலந்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து சிறு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும்.
- அடுத்து கடலை மாவை சர்க்கரை பாகில் சேர்த்து கலக்க வேண்டும். இடையிடையே நெய் சேர்த்து கிளற வேண்டும்.
- கடைசியாக நெய் தடவிய மற்றொரு பாத்திரத்தில் மாற்றி துண்டு துண்டுகளாக வெட்டி ஆறியதும் சாப்பிடலாம்.
தேங்காய் பர்ஃபி (Coconut Burfi) செய்ய தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் - 1 கப்
- ரவை - 1/4 கப்
- சர்க்கரை - 3/4 கப்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
- ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
- நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியில் தேங்காயை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் அதே வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து தேங்காயுடன் சேர்க்க வேண்டும்.
- அடுத்ததாக கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சி அதனுடன் ஏலக்காய் மற்றும் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
- இறுதியாக வறுத்த கலவையை சர்க்கரை பாகுடன் சேர்த்து நெய் தடவிய மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- தங்களுக்கு பிடித்த அளவில் வெட்டி ஆறியதும் சாப்பிடலாம்.