Ambani, Adani Net Worth Drops: படுமோசமான நஷ்டத்தைக் கண்ட அம்பானி, அதானி.. ப்ளூம்பெர்க் லிஸ்டில் இருந்து வெளியேற்றம்..!
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் ப்ளூம்பெர்க்கின் எலைட் சென்டிபில்லியனர்ஸ் கிளப்பில் இருந்து வெளியேறினர்.
டிசம்பர் 16, சென்னை (Technology News): இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி (Gautam Adani) ஆவர். இந்தியாவின் முதல் 20 கோடீஸ்வரர்கள் ஜனவரி 2024 முதல் 67.3 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளனர். இருப்பினும் ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அம்பானியின் ஆற்றல் மற்றும் சில்லறை வர்த்தகத் தொழில்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக அவரது சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் ஜூலை மாதம் 120.8 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்துக்கள், டிசம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி 96.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. Bosch Layoffs: தொடரும் லேஆஃப் நடவடிக்கைள்.. 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போஸ்ச் நிறுவனம்..!
அமெரிக்காவின் நீதித்துறை (DoJ) விசாரணையில் இருந்து அதானி குழுமம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் 122.3 பில்லியன் டாலராக இருந்த அதானி சொத்து மதிப்பு, இப்போது 82.1 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக அதானி, அம்பானி இருவரும் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்களைக் கொண்டவர்கள் அடங்கிய எலைட் சென்டிபில்லியனர்கள் கிளப்பில் ($100 billion club) இருந்து வெளியேறியுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவித்துள்ளது.