Sex Videos Recommended to Minors on Instagram: சிறார்ககளை கெடுக்கிறதா இன்ஸ்டாகிராம் அல்காரிதம்.. ரெகமெண்டில் வரும் ஆபாச படங்கள்..!

13 வயது சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் பாலியல் வீடியோக்களை பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Feeling Sad | Instagram Logo File pic (Photo Credit: Pixabay)

ஜூன் 21, சென்னை (Technology News): சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரிக்கவே, அமெரிக்காவில் மெட்டா உள்ளிட்ட முன்னணி சமூக வலைத்தளங்கள் மீது வழக்குப் பதிவானது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க செனட் சபையில் அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வலைதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனர்: அப்போது, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களின் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி நடவடிக்கை எடுக்க தவறியதற்காக நிறுவன அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. அச்சமயம் மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. அதற்கு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) மன்னிப்பு கோரினார். மேலும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில், லாபம் ஈட்டும் நடவடிக்கைகளை இணையதளங்கள் மேற்கொள்ள அமெரிக்க செனட் சபை நீதிக்குழு அறிவுறுத்தியது. French Actress Anouk Aimée Dies: பிரபல பிரெஞ்சு நடிகை அனோக் ஐமி மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!

இன்ஸ்டாகிராம் அல்காரிதம்: சமூகவலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். இதில் ஏராளமானோர் சினிமா நடிகர், நடிகைகளை ஃபாலோ செய்கிறார்கள். பலர் 2 அல்லது 3 அக்கவுன்ட்டுகளை கூட வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் முதலில் ஐபோனில் மட்டும்தான் இருந்தது. பிறகு இதை மெட்டா நிறுவனம் வாங்கிவிட்டதை அடுத்து 2012 ஆம் ஆண்டு முதல் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் இந்த சேவை கிடைக்கிறது. இந்த நிலையில் பொதுவாக சமூகவலைதளங்களில் மாற்றம் ஏதேனும் என்றால் அதற்கான அறிவிப்பு முதலில் வரும். அதன் பிறகுதான் அந்த மாற்றங்கள் செய்யப்படும். இதில் நாம் தொடர்ந்து எதை பார்ப்போமா அது பற்றிய விஷயமே தொடர்ந்து வருவது போன்ற அல்காரிதம் உள்ளது. இந்நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) நடத்திய ஆய்வில், 13 வயது சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் பாலியல் வீடியோக்களை பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif