Israeli Couple Arrested in Thailand for Filming Sex at Waterfall (Photo Credit: @AlbroAllan X)

நவம்பர் 06, கோ பா நகன் (World News): உலகில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வர வேண்டும் என இன்றளவில் இளைஞர்களிடையே அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் காரணமாக, பலரும் அதனை வீடியோ எடுத்து பதிவிட, ஒவ்வொருவரும் இன்ப அதிர்ச்சி தரும் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடவும், தேனிலவுக்கும் என அவர்கள் தங்களின் பயணத்தை தொடருகின்றனர். ஒருசிலர் தங்களின் முழுநேர பணியாக ஊரூராக சென்று வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். Plane Crash: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்.! 

நீர்வீழ்ச்சியில் உல்லாசம், தம்பதி கைது:

இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதி, அங்குள்ள வாங் சாய் தாங் நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது உல்லாசமாக இருந்துள்ளது. இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு இருக்கிறது. இதனால் வீடியோ உள்ளூர் வலைத்தளங்களில் வெளியாகி கண்டனத்தை குவிக்கவே, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், தம்பதியின் தற்போதைய இருப்பிடத்தை கண்டறிந்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இவர்களின் மீது தாய்லாந்து சட்டவிதிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்வோர் தங்களது பயண நாட்டின் சட்ட விதிகள் தெரியாமல் ஏதேனும் வரம்பு மீறிய செயலில் ஈடுபட்டால் கட்டாயம் ஆப்பு தேடி வரும் என்பதற்கு தம்பதியின் செயல் உதாரணமாக அமைந்துள்ளது.

நீர்வீழ்ச்சியில் உல்லாசமாக இருந்த தம்பதி தாய்லாந்து காவல்துறையினரால் கைது: