YesMadam Layoffs: "உங்களுக்கு மன அழுத்தமா..?" சர்வே நடத்தி பணிநீக்கம் செய்த யெஸ்மேடம் நிறுவனம்..!
ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம், ஊழியர்களிடம் சர்வே நடத்தி பணிநீக்கம் செய்துள்ளது.
டிசம்பர் 10, சென்னை (Technology News): நொய்டாவை தளமாகக் கொண்ட சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான யெஸ்மேடம் (YesMadam), ஊழியர்களிடம் மேற்கொண்ட சர்வேயில் கணிசமான மன அழுத்தத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்துள்ளது. நிறுவனத்தின் மனிதவளத் துறையின் மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், நிறுவனம் தனது ஊழியர்களிடையே பணியிட அழுத்த அளவை அளவிடுவதற்கு சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. இதில் மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். உடனே, அதிக மன அழுத்தத்தை (Stress) அனுபவிப்பதாகப் புகாரளித்தவர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்தது. வேலையில் யாரும் மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.57,048/- க்கு விற்பனை.!
மேலும், ஆரோக்கியமான மற்றும் ஆதரவான பணிச்சூழலை ஏற்படுத்துவதில், கருத்துக்களை அவ்வப்போது கேட்டறிந்தோம். இதன் அடிப்படையில், வேலையில் யாரும் மன அழுத்தத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக, குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தைக் காட்டிய ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து நீக்க கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூடுதல் விவரங்களை தனித்தனியாகப் பெறுவார்கள். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி என நிறுவனம் தெரிவித்துள்ளது.