OnePlus 12 5G Offer Sale: ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை..! முழு விவரம் இதோ..!

அமேசான் பிரைம் டே 2024 அன்று, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.7000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

OnePlus 12 5G Offer Sale: ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை..! முழு விவரம் இதோ..!
OnePlus 12 5G (Photo Credit: @techbharatco X)

ஜூலை 19, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G Smart Phone) ஸ்மார்ட் போனுக்கு ரூ.7000 தள்ளுபடி அளித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த 5G ஸ்மார்ட்போன் அமேசான் பிரைம் டே 2024 (Amazon Prime Day 2024) அன்று விற்பனையில் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கும். இதுகுறித்த முழு விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சலுகை:

ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன், அமேசான் பிரைம் டே 2024 விற்பனையில் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும். அமேசான் விற்பனையில் 7 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் வாங்கலாம். மேலும், 12 மாதங்களுக்கு No Cost EMI-யில் விற்கப்படும்.

இந்த தள்ளுபடியைப் பெற, ICICI வங்கி அல்லது One Card கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும். அமேசானில் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், கூடுதலாக ரூ.12,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பெறலாம். வருகின்ற ஜூலை 20 மற்றும் ஜூலை 21 அன்று இயங்கும் அமேசான் பிரைம் டே 2024 விற்பனையில் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். CPR Treatment For Old Man: விமான நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர்; சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய பெண் மருத்துவர்.. வீடியோ வைரல்..!

சிறப்பம்சங்கள்:

இதில், 6.82 இன்ச் Quad HD + 2K டிஸ்ப்ளே உடன், LTPO + பேனலில் உருவாக்கப்பட்டுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதம், 4500nits பிரகாசம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. திரைப் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 லேயர் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS-யில் வேலை செய்கிறது. செயலாக்கத்திற்காக, இது 3.3 ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் இயங்கும் 4 நானோமீட்டரில் கட்டப்பட்ட Qualcomm snapdragon 8 Gen 3 Octa core சிப்செட்டைக் கொண்டுள்ளது. கிராபிக்ஸ் மற்றும் மொபைல் கேமிங்கிற்கான மேம்பட்ட வேப்பர் கூலிங் சேம்பர், Adreno 750 GPU ஆகிய அம்சங்களுடன் உள்ளது.

இந்த போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் F/2.6 அப்பசருடன் கூடிய 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், F/1.6 அப்பசருடன் கூடிய 50MP வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் F/2 உடன் 48MP அல்ட்ரா வைட் ஆங்கிள் 2 aperture லென்ஸ் உள்ளது. இந்த கேமரா மூலம் 3x ஆப்டிகல் ஜூம் முதல் 120x ஜூம் வரையிலான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பி எடுக்க 32MP முன்பக்கக் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது F/2.4 அப்பசரில் வேலை செய்யும் 5P லென்ஸ் ஆகும்.

இதில், 5,400mAh பேட்டரி திறன் கொண்ட, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதி உள்ளது. இந்த போனை வெறும் 26 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்துவிடலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement