OnePlus 12R Offer Sale: அதிரடி சலுகையில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன் விற்பனை..! முழு விவரம் உள்ளே..!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரதான ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போன், தற்போது அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
ஜூன் 15, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபலமான நடுத்தர பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 12R (OnePlus 12R Smart Phone) அறிமுகப்படுத்தப்பட்ட 4 மாதங்களிலேயே அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கின்றது. தற்போது, எந்தவித சிறப்பு விற்பனையும் இல்லாத சமயத்தில், அமேசான் இந்த போனுக்கு நேரடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகையையும் வழங்குகின்றது.
சலுகையின் விவரங்கள்:
ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட் போனின் அறிமுக விலையான ரூ. 39,999-யில் இருந்து தற்போது, ரூ. 37,999-க்கு கிடைக்கின்றது. இதன் மூலம் ரூ. 2,000 தள்ளுபடியை பெறலாம். Young Girl Died Of Electrocution: லேப்டாப் சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண், மின்சாரம் தாக்கி பலி..!
மேலும், HDFC வங்கியின் டெபிட் கார்டு மற்றும் BOBCARD பயன்படுத்தி கூடுதலாக ரூ. 2,000 வரை தள்ளுபடி விற்பனையில் வாங்கலாம். இதனால், போனின் விலை ரூ. 35,999 ஆக குறைந்துவிடும்.
சிறப்பம்சங்கள்:
இதில், 6.78-இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே உடன், திரை அதிகபட்சமாக 4,500 நிட்ஸ் பிரகாசத்தை வழங்குகின்றது.மேலும், ஈரமான கைகளிலும் பயன்படுத்தும் வகையில், அக்வா டச் தொழில்நுட்பத்தையும் இது ஆதரிக்கின்றது.
இது, 8GB + 128GB ஸ்டோரேஜ் மற்றும், 16GB + 256GB ஸ்டோரேஜ் உள்ள இரண்டு மாடல்களில் வருகிறது.
முதன்மை செயலியான olan ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃப்ராசஸரை இந்த ஒன்பிளஸ் 12R கொண்டுள்ளது, இது மென்மையான செயல்திறன் மற்றும் சிறந்த கேமிங் திறன்களை உறுதி அளிக்கிறது.
இந்த போனில், 5,500mAh பேட்டரி திறன் கொண்ட, 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.