Redmi A3x: ரெட்மி A3x ஸ்மார்ட் போன் உலகளாவிய இணையதளத்தில் வெளியீடு..! விவரம் உள்ளே..!
ரெட்மி A3x ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 06, சென்னை (Technology News): சியாமி நிறுவனம் தனது ரெட்மி பிராண்டின் A-சீரிஸில் புதிய ரெட்மி A3x ஸ்மார்ட் போனை (Redmi A3x Smart Phone) உலகளாவிய இணையதளத்தில் முழுமையான விவரக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன், பெரிய 6.71-இன்ச் டிஸ்ப்ளேவுடன், HD+ ரெசல்யூஷன், ஆண்ட்ராய்டு 14 OS அவுட் ஆஃப் தி பாக்ஸ் மற்றும் பெரிய 5000mAh பேட்டரி திறனுடன் வருகின்றது. இதன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த போன் மூன்லைட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் அரோரா கிரீன் வண்ணங்களில் வருகின்றது. Benefits Of Muskmelon: முலாம் பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
சிறப்பம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் போன், 1650 x 720 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகிய அம்சங்களுடன் உள்ளது.
கிராபிக்ஸ் Malli G57 MP1 GPU உடன் Unisoc T603 சிப்செட் ஃபோனை இயக்குகின்றது. இது, 3GB+4GB LPDDR4x ரேம் மற்றும் 64GB+128GB eMMC 5.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
இதில், Android 14 OS மென்பொருள் செயல்திறன் இயக்குகிறது. மேலும், நிறுவனம் 2 முக்கிய OS Update, மற்றும் 3 வருட Security Patche ஆகியவற்றை உறுதியளிக்கின்றது.
பின்புறத்தில் 8MP ஷூட்டர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட QVGA இரண்டாம் நிலை கேமரா உடன், 5MP செல்பி கேமரா ஷூட்டர் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் போனில் 5,000mAh பேட்டரி திறன் வசதி கொண்ட, 10W சார்ஜிங் சப்போர்ட் உடன் வந்துள்ளது.
இதன் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் FM ரேடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)