Xiaomi CIVI Series Teaser: சியாமி CIVI சீரிஸ் டீஸர் வெளியீடு; விரைவில் ஸ்மார்ட் போன் அறிமுகம்..!
சிவி சீரிஸ் டீஸர் மூலம், விரைவில் அதன் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.
மே 22, சென்னை (Technology News): சியாமி பிராண்ட் நிறுவனம் இன்று ஒரு புதிய டீஸரை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. அதில், CIVI சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீஸர் வீடியோ மற்றும் சாத்தியமான மொபைல் பற்றிய முழு விவரங்களைப் பற்றி இதில் பார்ப்போம்.
இந்திய வெளியீட்டு டீஸர் (Xiaomi CIVI):
இந்த பிராண்ட் சமூக ஊடக தளமான X-யில் அதிகாரப்பூர்வ புதிய டீஸர் வீடியோவைப் பதிவிட்டுள்ளது. இதில், சினிமாட்டிக்கிலிருந்து (Cinematic) ‘CI’ மற்றும் விஷனில் (Vision) இருந்து ‘VI’ என்ற உரை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், CIVI சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு விரைவில் அறிமுகமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi CIVI 4 Pro ஸ்மார்ட் போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. மொபைலின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. Benefits Of Curry Leaves: கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
சியாமி சிவி 4 ப்ரோ (Xiaomi Civi 4 Pro) விவரக்குறிப்புகள் (சீனா):
இது Android 14 மற்றும் HyperOS உடன் இயங்குகிறது. 6.55-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 8S Gen 3 சிப்செட் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 12GB LPPDDR5x RAM மற்றும் 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
மேலும், 50MP முதன்மை கேமராவுடன் Leica Summilux லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸுடன், இரண்டு 32MP செல்பி கேமரா மற்றும் வீடியோ அழைப்பு அனுபவத்திற்காக அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வந்துள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன், 4,700mAh பேட்டரி திறன் பொருத்தப்பட்டுள்ளது.