Former PM Imran Khan: முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனவரி 17, இஸ்லமாபாத் (World News): பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் (Former Pakistan PM Imran Khan), பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டார். ஊழல் முறைகேடு (Land Corruption Case) அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Gaza Ceasefire Deal: முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. காசாவில் போர்நிறுத்தம் ஒப்புதல்..!
சிறை தண்டனை:
கடந்த 2023ஆம் ஆண்டு, ஊழலை தடுக்கும் பொறுப்பு நிறுவனமான, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB), இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது. இதில் முன்னாள் அதிபர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் தொழிலதிபர்கள் சிலர் மீது இந்த குற்றச்சாட்டு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜனவரி 17) இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)