Tsunami Warning: வானுட்டு தீவுகளில் 7.4 புள்ளி அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
டிசம்பர் 17, போர்ட் விலா (World News): தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு வானுட்டு (Vanuatu). ஆஸ்திரேலியாவில் இருந்து 1750 கிமீ தொலைவில் அமைந்துள்ள தீவுக்கூட்டத்தில், முக்கிய தீவாக இருப்பது வானுட்டு (Vanuatu Eartuquake). இன்றளவில் சுற்றுலாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தீவு நாடுகளில், வானுட்டு முக்கியமான ஒன்றாகும். அங்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள். Ambani, Adani Net Worth Drops: படுமோசமான நஷ்டத்தைக் கண்ட அம்பானி, அதானி.. ப்ளூம்பெர்க் லிஸ்டில் இருந்து வெளியேற்றம்..!
கட்டிடங்கள் சேதம்:
எரிமலை அமைப்புகளால் உருவான தீவு அமைப்பாக கருதப்படும் வானுட்டு பகுதியில், நிலநடுக்கம் என்பது இயலப்பானது. இதனிடையே, இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகள் மதிப்பில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக, அங்குள்ள பல கட்டிடங்கள் சேதத்தை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக தலைநகர் போர்ட் விலா (Port Vila)-வில் இருக்கும் அமெரிக்க தூதரக கட்டிட அமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
சுனாமி எச்சரிக்கை (Tsunami Warning):
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பலரும் வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில், நிலநடுக்கத்தின் அபாயத்தன்மை கடலில் சுனாமி அலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் வானுட்டு தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 மணிநேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அங்கு ஏற்பட்ட நிலையில், இன்னும் 1 மணிநேரத்திற்குள் சுனாமி அலைகள் தீவுப்பகுதியை தாக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் பதறவைக்கும் காட்சிகள்:
இன்னும் 2 மணிநேரத்தில் சுனாமி வானுட்டு தீவுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது: