Chinese Officials Filled Missiles With Water: சீன ராணுவத்தின் மாபெரும் ஊழல்... ராக்கெட்டுகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர்..!
சீன ராணுவத்தின் ராக்கெட் படைப்பிரிவில் உள்ள ராக்கெட்டுகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பி ஊழல் செய்யப்படுவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜனவரி 11, பெய்ஜிங் (Beijing): கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் ராக்கெட் படை மற்றும் தேசிய சட்டமன்ற அமைப்பிலிருந்து பல மூத்த ராணுவ அதிகாரிகள் பணியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டனர். இவர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆன லி ஷாங்ஃபுவின் அதிரடியாக பதவியில் இருந்த நீக்கப்பட்டார். இந்த தொடர் பதவி நீக்கங்கள் சீனா முழுவதும் அதிர்ச்சியை கிளப்பியது. பின்னர் ஷி ஜின்பிங் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆக நியமிக்கப்பட்டார். FIR Against Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
இந்நிலையில் இந்த பதவி நீக்கத்திற்கும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் (PLB) தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை (US intelligence) பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி சீன ராணுவத்தின் ராக்கெட் படை பிரிவில் உள்ள ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளில் எரிபொருளுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பி ஊழல் செய்யப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். 2050 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தை நிறுவும் நோக்கத்தில் சீன தலைவர் ஜி ஜின்பிங் பல்வேறு முதலீடுகளை ராணுவத்திற்காக செய்திருந்தார். இப்படிப்பட்ட நேரத்தில் சீனாவின் ராணுவத்தில் ஊழல்கள் நடப்பது உலகத்தையே அதிர செய்துள்ளது. இதனால் சீன ராணுவத்தில் இன்னமும் பணி நீக்கங்கள் தொடரும் என்று உலக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.