Joy Crizildaa (Photo Credit : Instagram)

அக்டோபர் 13, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலை செய்து அடையாளம் பெற்று பின் நடிகரானார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், திரையுலகில் அடியெடுத்து வைத்தபின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு முன்னதாகவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்:

இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. Bigg Boss Tamil Eviction: பிக் பாஸ் முதல் வாரத்தில் வெளியேறியது யார்?.. எஸ்கேப் ஆன வாட்டர் மெலன் ஸ்டார்.. லீக்கான தகவல்.!

சட்டப்படிப்பை தொடங்கிய ஜாய் கிரிசில்டா:

இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டபடி இருந்தார. இதனால் நீதிமன்றத்தை நாடிய  ரங்கராஜ், என்னைப்பற்றி பேசுவதற்கும், வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்ட நிலையில், மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜை தாக்கி ஜாய் கிரிசில்டா பதிவை போட தொடங்கினார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் 'Law Student' என்பதை சேர்த்துள்ளார். மேலும் இது குறித்த இன்ஸ்டா ஸ்டோரியில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார். ரங்கராஜ் மீது இருக்கும் தீரா காதலால் எப்படியாவது நீதியைப் பெற்று விட வேண்டும் என எண்ணி ஜாய் கிரிசில்டா சட்டப்படிப்பையே படிக்க தொடங்கி விட்டதாக பலரும் அவரின் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியான ஸ்ருதியும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாய் கிரிசில்டாவின் சமீபத்திய பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)