செப்டம்பர் 24, சென்னை (Cinema News): தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழ் திரையுலகில் நிகழும் பிரபலங்களின் திருமணங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார். இவருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையே பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படத்தை ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம்:
இதனிடையே, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj Second Marriage) திருமணம் செய்தார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படம் வெளியான மறுநாள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின் ஒருகட்டத்தில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்துவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்தாமல் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜாய் புகார் அளித்தார். Operation Numkhor: ஆபரேஷன் நும்கூர்.. நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிரடி சோதனை.!
கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா புகார் மனு:
இது குறித்த புகார் மனுவில், "சென்னையில் உள்ள கோவிலில் வைத்து மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்தார். சமீபத்தில் அவர் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியதால், அது குறித்து கேட்க தனியார் தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது அவர் என்னை தாக்கினார். கோவிலில் வைத்து திருமணம் செய்து தற்போது என்னுடன் வாழ மறுக்கிறார். நான் 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ மன்றாடுகிறேன். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்" என தெரிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்:
இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை செப்டம்பர் 26ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றியது உண்மை என்ற தகவல் வெளிவருமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.