Jeera Water (Photo Credit : @itz_thilo X)

நவம்பர் 13, சென்னை (Health Tips Tamil): சமையலறை அஞ்சறைப் பெட்டியில் சேமித்து வைக்கப்படும் பொருள்களில் முக்கியமானது சீரகம். சீரகத்தை நீரில் காய்ச்சி அந்த நீரை குடித்து வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உடலில் செரிமானம் மேம்பட்டு நச்சுக்கள் வெளியேறும். உடல் எடையையும் குறைக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கொழுப்பை கரைக்கும் விஷயத்திலும் சீரகம் பெரிய உதவி செய்யும். ரத்த சர்க்கரை அளவு சீராகி ரத்தசோகை பிரச்சனை சரியாகும். சீரகத்தை தினமும் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஆரோக்கியம் மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். Road Side Kalan: சுவையான ரோட்டுக்கடை காளான் செய்வது எப்படி?.. மழைக்கு இதமாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

சீரக தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்:

தூக்கமின்மை பிரச்சனையும் குறையும். சீரக தண்ணீர் செரிமான மண்டலத்தை சீராக இயக்கும் என்பதால் அஜீரணம், வயிற்று வலி, வாய் கோளாறு போன்றவை நீங்கும். உடல் எடையை குறைக்க உதவுவது, வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்சனையை சரிசெய்வது என இதன் பங்கு அதிகம் என்றே கூறலாம். தொப்பையை குறைக்க சீரக தண்ணீர் ஒரு நல்ல மருந்து. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை கரைத்து ஆக்ஸிஜனேற்றம் தடுக்கப்பட்டு கேடான கொழுப்பு அளவு குறைக்கப்படும். இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

சீரக தண்ணீரை தினமும் எந்த அளவில் குடிக்க வேண்டும்?

அதுபோல உடலில் நச்சு விளைவிக்கும் பாக்டீரியாக்களை சுத்தப்படுத்தி ரத்தத்தை சுத்திகரித்து உடல் நலனை பாதுகாக்கிறது. இரும்புச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இரத்த சோகை பிரச்சனையும் தீரும். பூஞ்சை எதிர்ப்பு பண்பு சருமத்தில் பிரச்சனைகளை நீக்க உதவும். தினமும் ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதே சமயத்தில் அதிகளவு எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு 100ml முதல் 250ml வரை தேவைக்கேற்ப குடிக்கலாம். சீரகத்தை காய்ச்சி அல்லது முன் தினம் இரவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிக்கலாம்.