ஜனவரி 11, தருமபுரி (Dharmapuri): தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் "என் மண் என் மக்கள்" பாதை யாத்திரை பயணத்தின் மூலமாக மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள் (En Mann En Makkal)' பயணம் அவரது தலைமையில் தொடர்ந்தது.
தேவாலயத்திற்குள் செல்ல முயற்சி: அந்த பயணத்தின் போது, பொம்மிடி பி.பள்ளிப்பட்டி பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள லூர்துமலை அன்னை மேரி தேவாலயத்திற்கு சென்ற அவர், தேவாலயத்திற்குள் சென்று மாதா சிலையை வழிபட முயற்சித்தார். அப்போது, அப்பகுதியை சார்ந்த இளைஞர்கள், அண்ணாமலையை தடுத்து நிறுத்தி தேவாலயத்திற்குள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்தனர். Kanguva Surya Look: அட்டகாசமான மாஸ் லுக்கில், கங்குவானாக மிரட்டும் சூர்யா: மிரளவைக்கும் வைரல் கிளிக் இதோ.!
உள்ளூர் இளைஞர்கள் வாக்குவாதம்: இதனால் அங்கு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைக்கு பின் தேவாலயத்திற்குள் சென்று அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இருதரப்பு மோதலை ஏற்படுத்த முயன்றதாக வழக்குப்பதிவு: இந்த நிலையில், தற்போது அண்ணாமலைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற பொம்மிடி காவல்துறையினர், அண்ணாமலைக்கு எதிராக இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 153 (A), 504, 505 (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக அண்ணாமலையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை நிலை என்ன? முன்னதாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், அண்ணாமலைக்கு நெருக்கமானவராகவும் இருந்த அமர் பிரசாத் ரெட்டி, தனது ஊரில் பாஜக கொடிக்கம்பம் ஏற்ற முயன்ற போது கைது செய்யப்பட்டு, அவரின் மீது பல்வேறு வழக்குகள் தூசி தட்டி பதியப்பட்டு சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அண்ணாமலையின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.