Dubai Floods: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்ப்பு.. தத்தளிக்கும் பாலைவன துபாய்..!

துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.

Dubai Flood (Photo Credit: @annngelkek X)

ஏப்ரல் 17, துபாய் (World News): துபாய் (Dubai) என்றால் பாலைவன நாடு, அங்கு பொதுவாக மழை பெய்வது இல்லை என்ற கருத்து இருந்து வருகிறது. ஆனால் அங்கு திடீரென நேற்று கன மழை பெய்தது. துபாயில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவின்படி 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. National Banana Day 2024: வரலாற்றில் வாழைப்பழ தினம் இன்று; அமெரிக்கா தேடிய முக்கிய கனி.. ஆச்சரியமூட்டும் தகவல்.!

இந்த வரலாறு காணாத கன மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை சமுத்திரம் போல் காட்சியளித்தது. துபாயின் மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மேலும் துபாய் வெள்ளம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement