ஏப்ரல் 17, சென்னை (Chennai): தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாக வாழை உள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு எந்த ஒரு நோயும் வராது என்று கூறுவதும் உண்டு. இந்த வாழைப்பழமானது மிகவும் விலை குறைவாகவே நமக்கு கிடைக்கக்கூடியது. எனவே இதனை எல்லோராலும் தினமும் சாப்பிட முடியும்.
வரலாறு: அமெரிக்காவில் ஆண்டதோறும் ஏப்ரல் 17 ஆம் தேதி தேசிய வாழைப்பழ தினம் (National Banana Day) கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள வாழைப்பழம் நிறுவனங்கள் வாழைப்பழங்களை உட்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த நாளிலே உருவாக்கியது என்ற வரலாறு இதற்கு உண்டு. அதே நேரம் மத்திய மற்றும் தென் அமெரிக்கா கரீபியன் போன்ற பல நாடுகளின் பொருளாதாரத்தில் வாழைப்பழ தொழில் என்பது முக்கிய பங்கினை கொண்டுள்ளது. இத்தகைய வாழைப்பழம் ஆனது முதன் முதலில் ஆசியாவில் தான் தோன்றியது. பின்னர் மத்திய அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவிற்கு போனது. கிமு 327ல் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பி சாப்பிட்டதாக வரலாறு உண்டு. அவர் திரும்பி செல்லும் பொழுது கிரேக்கம் மற்றும் மேலை நாடுகளில் வாழைப்பழத்தை அறிமுகப்படுத்தியதாகவும் வரலாறு கூறுகிறது. International Haiku Poetry Day 2024: "கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி" - ஹைக்கூ கவிதை தினம் இன்று! உருவானது எப்படி?..!
சத்துக்கள்: இத்தகைய வாழைப்பழத்தில் (Banana) பொட்டாசியம் மெக்னீசியம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 உள்ளிட்ட பல்வேறு விதமான சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இது குறைந்த கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் இது நன்மையை அளிக்கக்கூடியது. அதேநேரம் வாழைப்பழத்தில் பல வகையான ஸ்னாக்ஸ்களை செய்யலாம். நீங்கள் தினமும் வாழைப்பழத்தினை உட்கொள்வதன் மூலம் உங்களின் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள முடியும்.
வாழைப்பழ வகைகள்: அதே நேரம் இந்த உலகம் உள்வதும் பல்வேறு வகையான வாழைப்பழங்கள் உள்ளன. சிறிய அளவில் இருந்து மிக நீண்ட நீளம் வரை வளரக்கூடிய வாழைப்பழ வகைகள் உண்டு. அதே நேரம் வாழைப்பழ தோல்கள் மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, ஊதா என்று பல்வேறு வகையான நிறங்களில் கிடைக்கின்றன. அதே நேரம் பேயன், ரஸ்தாலி, பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலவாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழை, பூவன், கற்பூரம், மொந்தன், நேந்திர,ம் கருவாலைப்பழம், அடுக்கு வாழைப்பழம், வெள்ளை வாழைப்பழம் என பல வகையான வாழைப்பழ வகைகள் உண்டு. இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும்.