ஆகஸ்ட் 14, கிஷ்த்வார் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் (Kishtwar) மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு (Cloudburst) மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவத்தின் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் வாழ்விடங்களையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பஹல்காம் பகுதியிலும் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பார்ட்டியில் போதைப்பொருள் கொடுத்து கொடூரம்..!
பலி எண்ணிக்கை அதிகரிப்பு:
கோரமான வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்க, தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, கொத்தகை போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராம்பூரில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கொத்தகையில், வெள்ளத்தில் சிக்கிய ஏராளமான கார்கள் சேதமடைந்துள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் என பல உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிவாரணப் பணிகளுக்கு அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
வீடியோ காட்சிகள் இதோ:
A massive cloudburst struck the Chositi (Chishoti/Chashoti) area of Paddar sub-division in Kishtwar district, along the Machail Mata Yatra route. #Cloudburst pic.twitter.com/6joaVZSvn9
— pardeep jakhar (@jakharpardeep) August 14, 2025