Pakistan Massive flood (Photo Credit : @HarunaNAbdullah X)

ஆகஸ்ட் 17, பாகிஸ்தான் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி கனமழை பெய்து வரும் நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மேகவெடிப்பு (Pakistan Floods) ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கடந்த 48 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கனமழை, நிலச்சரிவில் சிக்கி புனேரி மாவட்டத்தில் 10 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாகவும், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 184 பேர் உயிரிழப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. Russia United States Summit 2025: முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.. டிரம்புக்கு புதின் புகழாரம்.! 

கனமழை தீவிரமடைய வாய்ப்பு :

இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள், மாயமானவர்களை தேடும் பணிகளில் 2,000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கனமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே பாகிஸ்தான் மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது தொடர்பாகவும், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வீடுகளை ஆக்கிரமிப்பது தொடர்பாகவும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் மேகவெடிப்பால் கரை புரண்டு ஓடிய வெள்ளம் :