செப்டம்பர் 24, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால், தெருக்களில் வெள்ளம் (Flood) பெருக்கெடுத்து ஓடியது, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் பெய்த மழையின் அளவு, 24 மணிநேரத்தில் 251.6 மிமீ மழையாக இருந்தது. இது 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு நகரத்தில் பதிவான மிக அதிக மழை என்று கொல்கத்தாவில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) பிராந்தியத் தலைவர் பிஸ்வாஸ் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்களின் மிகப்பெரிய வருடாந்திர பண்டிகையான வரவிருக்கும் துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சொத்து தகராறில் தொழிலதிபர் கொலை.. மகன் உட்பட இருவர் கைது..!
12 பேர் உயிரிழப்பு:
இந்நிலையில், அங்கு பெய்த கனமழை காரணமாக, மாநில தலைநகரம் முழுமையாக ஸ்தம்பித்தது. நகரம் முழுவதும் மூங்கில் மற்றும் பிற பொருட்களால் கட்டப்பட்ட தற்காலிக கட்டமைப்புகள் மற்றும் தெய்வங்களின் களிமண் சிலைகளும் சேதமடைந்தன. சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உணவு விநியோகம் மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, கொல்கத்தாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு கொல்கத்தாவில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.