Syria Civil War: தலைமறைவான சிரியா அதிபர் என்ன ஆனார்..? தொடரும் உள்நாட்டுப் பிரச்சனை..!
தலைமறைவான சிரியா அதிபர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 10, டமாஸ்கஸ் (World News): சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக உள்நாட்டு போர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெடித்தது. அன்று முதல் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா ராணுவம் இடையே எதிரெதிர் தாக்குதல் நடந்து வந்தன. சிரியாவில் (Syria War) ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளது. அதிபர் பஷர் அல் அசாத் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. Syria Civil War: "சிரியா பிரச்சனைக்கு ஈரான் தான் காரணம்" இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு..!
இந்நிலையில், கடந்த 13 நாட்களாக உள்நாட்டு போர் தீவிரம் அடைந்தது. கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கிய நிலையில், ஆபத்தை உணர்ந்த சிரியா அதிபர் பஷர் அல் அசாத் நாட்டைவிட்டு தப்பி சென்றார். இதனையடுத்து, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் வந்தது. மேலும், சிரியாவின் சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், சிரியா அதிபரின் தோல்வியை பட்டாசு வெடித்து சிரியா மக்கள் கொண்டாடி வருகின்றனா்.
இதற்கிடையே சிரியா அதிபர் பஷர் அல் அசாத் (Bashar al-Assad) என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சிரியா அதிபர் ரஷ்யாவுக்கு சென்று தஞ்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு பயந்த பஷர் அல் ஆசாத், ரஷ்யாவிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாதுகாப்பில் சிரியா அதிபர் இருப்பது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிபர் அசாத்திற்கு ஆதரவளித்த ரஷ்யா அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளது. இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.