Suchir Balaji Death: ஓபன்ஏஐ நிறுவனம் மீது குற்றம்சாட்டிய இந்திய இளம் ஆராய்ச்சியாளர்.. அமெரிக்காவில் மர்ம மரணம்..!
அமெரிக்காவில் ஓபன்ஏஐ முறைகேடு பற்றி குற்றம்சாட்டிய இந்திய இளம் ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 14, நியூயார்க் (World News): இந்தியாவை சேர்ந்த சுசீர் பாலாஜி (வயது 26) என்பவர், அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (OpenAI) குறித்து ஆய்வு செய்த வந்திருக்கிறார். இதில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், ChatGPT-யை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்துள்ளார். இதுதவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
பதிப்புரிமை சட்டத்தை மீறிய ஓபன்ஏஐ:
இந்நிலையில், சுசீர் பாலாஜி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்சனையை சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். அதாவது காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாக குற்றம்சாட்டியிருந்தார். அதில், OpenAI-யில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அது பதிலளிக்கிறது. அந்த பதில் எங்கிருந்து பெறப்படுகிறது? பெரும்பாலும் ஆய்வு முடிவுகளிலிருந்து கிடைக்கும். எனவே இந்த ஆய்வை செய்தவரிடம் பணம் கொடுத்து அந்த முடிவுகளை வாங்க வேண்டும். ஆனால், OpenAI இதை செய்யவில்லை என்பதுதான் குற்றச்சாட்டாக அவர் கூறினார். TIME 2024 Person: 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் யார்? டைம் இதழ் ஆய்வு தகவல்.!
மர்ம மரணம்:
மேலும் அவர் கூறுகையில், வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்த OpenAI கடுமையாக பாதிக்கிறது. OpenAI தகவல்கள் ChatGPT-யை பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், 'நான் சொல்வதை நீங்களும் நம்பினால், இந்நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். இது ஒட்டுமொத்த இணைய சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைதல்ல' எனவும் சுசீர் பாலாஜி (Suchir Balaji) கூறியிருந்தார். இதுதான் அவருடைய கடைசி பதிவாக இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் சலசலப்பை கிளப்பியிருந்த நிலையில், கடந்த நவம்பர் 26ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவரது மரணம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.