Pakistani Airstrikes In Afghanistan: ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. எச்சரிக்கை விடுத்துள்ள தாலிபான்கள்.!

ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Airstrike (Photo Credit: @mid_day X)

டிசம்பர் 25, இஸ்தான்புல் (World News): ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், பாகிஸ்தான் நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் (Pakistani Airstrikes), குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முர்க் பஜார் கிராமம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது. வஜிரிஸ்தானி அகதிகளை இலக்கு வைத்துதான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. Israel Hamas War: இரக்கமின்றி செயல்படும் இஸ்ரேல் ராணுவம்.. வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை..!

எச்சரிக்கை விடுத்துள்ள தாலிபான்கள்:

பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அண்மைகாலங்களில் பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்கள்தான் ஆதரவு தருகிறது. இதனாலேயே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.