US School Shooting: அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி.. 9 பேர் படுகாயம்..!
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி, மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
டிசம்பர் 17, வாஷிங்டன் (World News): அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் 17 வயது மாணவி ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு (Gunfire) நடத்தினார். இதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். Tsunami Warning: வானுட்டு தீவுகளில் 7.4 புள்ளி அளவில் அதிபயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் வாய்ப்பு அதிகமுள்ளது. இதுகுறித்த விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவியும் உயிரிழந்துவிட்டார் என தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.