Road Safety: இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சாலை பாதுகாப்பு குறித்த வீடியோ வைரல்..!

போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த லாரி ஓட்டுநரின் விழிப்புணர்வு வீடியோ இந்த பதிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Road Safety (Photo Credit: Pixabay)

டிசம்பர் 24, டெல்லி (Automobile  News): இந்தியாவில் நாளுக்குநாள் சாலை விபத்துக்கள் (Road Accident) அதிகரித்துகொண்டே போகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் 2023-24 புள்ளி விவரப்படி, சுமார் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. இதில், 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் அதிக விபத்துகள் (Road Safety Awareness) நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. Stand-Up India Scheme: தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கான ஆசை திட்டம்.. ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம்.. முழுவிபரம் உள்ளே..!

சாலை விபத்துக்கள்:

இதற்கு முக்கிய காரணமாக நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக, மது அருந்தி விட்டு வாகனம் (Drunken Driving) ஓட்டுவதால் ஏற்படுகிறது.

விழிப்புணர்வு பதிவு:

அந்தவகையில், லாரி மற்றும் பிற கனரக வாகனங்கள் அருகில் பைக் மற்றும் சிறிய ரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், லாரி ஓட்டுநர் இருக்கையில் இருந்து பார்க்கையில், கீழே நிற்கும் பைக் அவர்களை தெரிய வாய்ப்பில்லை. இதன் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை லாரி ஓட்டுநர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விழிப்புணர்வு வீடியோ (Awareness Video) கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ இதோ: