டிசம்பர் 24, சென்னை (Technology News): தொழில்துறையை ஊக்குவிக்க 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரபட்ட ஸ்டார்ட் அப் இந்தியா பிளான் என்னும் திட்டமிடலில் பல ஸ்கீம்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினரையும் மற்றும் பெண்களையும் சொந்த தொழில் முனைவோர்களாக்க உருவாக்கப்பட்டதே இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம் (Stand up India loan scheme). புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி வரை, அவர்களுக்குத் தேவையான கடன்களை வழங்கும் திட்டமாகும். Laptop Buying Guide: லேப்டாப் வாங்க போறிங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்காம வாங்காதீங்க..!
ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் ஸ்கீம்:
இந்த திட்டத்தில் கடன்களைப் பெற பட்டியலினத்தோர், பழங்குடியினர் மற்றும் பெண்களாக இருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தனியாக ஆரம்பிக்காத நிறுவனமாக இருப்பின் அதில் கடன் பெறும் நபரின் சேர் 51% இருக்க வேண்டும். மேலும் கடன் பெறும் நபருக்கு இது தான் முதலில் தொடங்கும் தொழிலாக இருக்க வேண்டும். மற்றும் ஆண்டு வருவானம் 25 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன்கள் பெறலாம். மேலும் தொடங்கவிருக்கும் தொழிலின் ப்ரோஃபைல் நன்றாக இருந்தால் துணை ஈடு (Collateral security) இல்லாமல் கடன்கள் பெறலாம். சேமிப்பு கணக்கிருக்கும் வங்கியிலேயே இந்த கடன்களை முறையே பெற முடியும். அல்லது இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா என்னும் இணையதளத்திலும் விண்ணப்பிக்க முடியும்.
கேஒயிசி (kyc) டாக்குமெண்ட்ஸ் - ஆதார் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பேங் ஸ்டேட்மெண்ட், நிறுவனத்தின் பத்திரங்கள் மற்றும் தொழிலின் புரொஃபைல் போன்றவை தேவைப்படுகிறது.