Car Vs Taxi: நடுத்தர குடும்பம் கார் வாங்குவது நல்லதா? இல்லை டாக்ஸி போதுமா? விபரம் உள்ளே.!

குடும்பத்தில் உள்ளவர்கள் அதிக தூரம் வெளியில் செல்ல வேண்டியிருந்தால், கார் வாங்குவது குறித்தும் யோசிக்கலாம்.

BMW (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, புதுடெல்லி (Technology News): நடுத்தர மக்களின் கனவாக இருப்பதில் ஒன்று, சொந்தமாக கார் வாங்குவது. ஆனால் வசதிக்கு மீறியும், வேறு தேவைகள் இருக்கும் போது, பிற்கால சேமிப்பு இல்லமால் இருக்கும் போதும் கார் வாங்கினால் கடனாளியாக இருக்க வேண்டும். இருப்பினும் குடும்பமாக நெடுந்தூரம் செல்வோர் ஒரு கார் வாங்குவது போக்குவரத்து செலவுகள் குறையும் என பட்ஜெட்டிற்குள்ளான காரை வாங்குகின்றன. ஆனால் தற்போது ஆன்லைனில் கார்களை எப்போது எங்கு என தேவையான நேரத்திற்கு புக் செய்து கொள்ளலாம். அதிலும் பெரு நகரங்களில் வசிப்பவர்கள் உபர், ஓலா போன்ற டாக்ஸிகளை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் சொந்த கார் வாங்குவது லாபமா இல்லையா என பலருக்கும் குழப்பம் நிழவி வருகிறது.

சொந்தமாக கார் இருப்பது ஒரு ஸ்டேடஸாக பார்க்கப்படுகிறது. பெரு நகரங்களில் பொருமான்மையானவர்கள் அதிகம் சம்பாதிக்கக் கூடியவர்கள் இதனால் லோகன்கள் எளிதில் கிடைப்பதால் சுலபமாக கார் வாங்கி விடுகின்றனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரு நகரங்களில் கார் வைத்திருப்பவர்கள் அவ்வளவு சுலபமாக காரில் அலுவலகம் செல்ல முடியாது. கார் வாங்குவதற்கு முன் நீங்கள் செல்லும் தூரமும், உங்களுக்கு அது எவ்வளவு தேவை என்பதையும் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். மேலும் கார் வாங்கிய ஒரு ஆண்டில், காரின் மதிப்பு ஒரிஜினல் விலையில் இருந்து கிட்டத்தட்ட 20% வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாவது ஆண்டு, காரின் மதிப்பில் கிட்டத்தட்ட 35 சதவிகிதமும், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால், 45% குறையும். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் காரின் மதிப்பு அதிகளவில் குறையும். மற்றும் பார்கிங்கிற்கு இடத்தை கண்டறிவது கார் வாங்குவதை விடக் கடினமாக பெரு நகரங்களில் எங்காவது நிறுத்தினால் அபராதமும் செல்லத வேண்டி வரும். Car Buying Guide: புது கார் வாங்க போறீங்களா? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

கார் சொந்த மாக வாங்க நினைப்பவர்கள், வருமானம் எவ்வளவு, ஒரு வருடத்துக்கு மொத்தமாக எரிபொருள், பராமரிப்பு, சர்வீஸ் மற்றும் சாலைக் கட்டணம், பார்க்கிங் உட்பட பல்வேறு செலவுகளையும் பட்டியலிட்டு உங்களுடைய காருக்கான பட்ஜெட்டைப் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போல் புக் செய்து செல்லும் கார்களின் வாடகைக்கான விலையையும் கணக்கு செய்து கொள்வது அவசியம்.

கார் வாங்குவது நல்லதா?

நீங்கள் வாங்க நினைக்கும் கார், ஒரு பொதுவான உயர்நிலை அல்லது நடுத்தர அளவிலான SUVயின் விலை சுமார் ₹10 லட்சம். முன்பணமாக 3%, மற்றும் மீதமுள்ள கடனுக்கான வட்டி 7-9% வரை 1% இருக்கும். இந்த இஎம்ஐ ஐந்து ஆண்டுகள் என வைத்துக் கொண்டால், மாதம் குறைந்தபட்சம் ₹14,000 கட்ட வேண்டும். அனைத்தையும் சேர்த்து காரிற்கு ₹11.5 லட்சம் செலுத்துமாறு இருக்கும். ஆண்டிற்கு ஆண்டு ஏறும் பெட்ரோல் அல்லது டீசலின் விலையையும் 8% என்று வைத்துக் கொண்டால், எரிபொருள் மட்டும் ஏழு ஆண்டுகளில் ₹11 லட்சம் வரை செலவாக்க வாய்ப்புள்ளது. மற்றும் காரிற்கு செய்யும் காப்பீட்டுத் தொகையானது வருடத்திற்கு சுமார் ₹15,000 வரை வரக்கூடும். கார்களை பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பிற்காக வருடத்திற்கு ₹10,000 கூடுதலாக ஒதுக்க வேண்டும். காரின் வயது அதிகரிக்க அதிகரிக்க, ​​பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்துவிடும். இவைகளை முன்கூட்டியே கணக்கீடு செய்து அவசியம். மேலும் இவைகளுடன் கார்களுக்கென்று எங்கு சென்றாலும் பார்கிங்கிற்கு டிக்கெட்டுகள் செலவுகளும் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழைய கார்கள் பாரமரிப்பு செலவுகள் அதிகம்.

சொந்த கார்களை நிறுத்துவதற்கு இடவசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.பெரு நகரங்களில் கார் நிருத்த இடவசதி இல்லாதவர்களுக்கு வாடகைக்கார்களே சிறந்தது. மேலும் அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா அல்லது தொலை தூரப்பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் டாக்ஸியையே தேர்ந்தெடுக்கலாம். இது நேரத்தையும், போக்குவரத்து செலவையும் குறைக்கும். மேலும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொருத்து காரை தேர்ந்தெடுக்க முடியும். தினமும் அலுவலகம் அல்லது தொலைதூரம் செல்பவர்கள் நிச்சயமாக எவ்வளவு தூரம் செல்கிறோம் அதற்கு ஆகும் செலவுகள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும். சொந்த கார் தேவை இல்லாதவர்கள், டாக்ஸியைப் பயன்படுத்துவது லாபகரமானதாகவே இருக்கும். டாக்ஸியில் பயணிக்கும்போது, நாம் செலுத்தும் கட்டணம் எரிபொருள் செலவு, டிரைவர் ஊதியம், காரின் இன்ஷூரன்ஸ் மற்றும் கம்பெனியின் லாபம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

டாக்ஸி நிறுவனங்களின் கட்டணம்:

டாக்ஸி நிறுவனங்களின் கட்டண அடிப்படையில், மாதம் 1000 கிமீ பயணிக்கும் ஒரு நபர், டாக்ஸிக்கு செய்யும் செலவு குறைந்தபட்சமாக ரூ.8000 மட்டுமே. அதிகபட்சமாக சொகுசு கார்களுக்கு ரூ.20,000 வரை ஆகலாம். அதேபோல், நகரங்களுக்குள், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 - 20 கிமீ மட்டுமே பயணிக்கிறார்கள். மாதத்துக்கு 600 கிமீ பயணம் செய்தால், ஆகும் செலவு மேலும் குறையும். மேலும் டாக்ஸி நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைகளையும் வழங்கி வருகின்றன. மேலும் இது பாதுகப்பானதாகவும் ஊள்லது. பார்கிங் தேடி நேரத்தையும் எரிபொருளை வீணாக்கும் அவசியம் இருக்காது. தினமும் பயணிப்பவர்கள், அவர்களின் தேவைப் பொருத்து சொந்த கார இல்லை வாடைக்காரா என முடிவு செய்யலாம். சொந்த கார் எனில் உங்கள் தேவையைப் பொறுத்து என்ன கார் என்பதையும் எத்தனை பேருக்கானது என்பதையும் முதலில் முடிவு செய்ய வேண்டும். ஒரு காரை வாங்கும்முன் அந்த காரின் நிறை, குறைகள் குறித்த ரிவ்யூக்களைப் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த காரின் பவர், மாடல், அதில் இருக்கும் வசதிகள்,அனைத்தையும் அறிய வேண்டும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now