Rumion (Photo Credit: @autocar X)

பிப்ரவரி 11, புதுடெல்லி (Technology News): ஒரு சிறிய காரில் குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருப்பப்பட்ட இடத்திற்கு சென்று, நிம்மதியாக வார விடுமுறையை கழிக்க வேண்டும் என்பது பல நடுத்தர குடும்பத்தில் இருக்கும் அதிகபட்ச ஆசைகளில் ஒன்றாகும். நீண்ட நாட்கள் பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வைத்தோ, இஎம்ஐ அல்லது கடன் வாங்கியோ காரை வாங்க விருப்பப்பட்டு வாங்குவர். அப்படி குடும்பமே எதிர்பார்த்து காத்திருக்கும் கனவு காரை ஏதோ ஒரு பொருளை வாங்குவது போல வாங்கி விட முடியாது. ஆசைப்பட்டு வாங்கும் கார் அனைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையிலும், பட்ஜெட்டிற்குள்ளும் இருக்க வேண்டும். முதன் முதலில் புதிய கார் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

காரின் தேவை அதிகமிருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். மாதம் காரில் பயணம் செய்தும் நிதி நிலையை பாதிக்கவில்லை எனில் வாடகை கார்களை பயன்படுத்துவது சிறந்தது. குறைந்த விகிதத்தில் காரை, பயன்படுத்தினாலும் அதிக செலவுகள் ஏற்படுகிறது எனில் கார் வாங்கலாம். Infosys Layoffs: திடீரென 400 பேரை பணிநீக்கம் செய்த இன்ஃபோசிஸ்.. காரணம் என்ன? அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

காரின் தேவை:

முதலில் கார் வாங்கும் போது எந்த நோக்கத்திற்காக வாங்குகிறீர்கள் என தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் பயன்படுத்துவதற்காகவா அல்லது எப்போதாவது பயன்படுத்துவதற்கா என முதலில் திட்டமிட வேண்டும். சிலர் தினமும் அலுவலகத்திற்கு செல்வதற்காகவும் கார் வாங்குவர். சிலர் வார விடுமுறைகளுக்கு வீடுகளுக்கு செல்வதற்காகவும், சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக மட்டும் பயன்படுத்துவர். தேவைகேற்ப காரைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இவைகளை வைத்து டீசல், பெட்ரோல், அல்லது மின்சார வாகனங்களில் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்துக் கொள்ளலாம். மாதத்திற்கு 1500 கிலோமீட்டருக்கும் குறைவாக ஓட்டும் போது பெட்ரோல் வாகனம் வாங்கலாம். அதிகமாக பயணிக்கும் போது டீசல், கம்ப்ரச்டு பயோ டீசலை வாகனங்களை வாங்கலாம். சரியான முறையில் கையாளத் தெரிந்தால் மின்சார காரை வாங்கலாம். கூடுதலாக காரை நகரத்திற்குள்ளா அல்லது வெளியிடங்களில் ஓட்டுவதற்கா எனவும் கவனிக்க வேண்டும்.

கார் அளவு:

கார் வாங்கும் போது காரின் அளவை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில், குடும்பத்திற்காக கார் வாங்கும் போது உறுப்பினர்களை கணக்கிட்டு அனைவருக்கும் சௌகரியமாக இருக்குமாறு காரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கார்களை பொறுத்தவரை, ஹேட்ச்பேக், சீடன், எஸ்யுவி எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையும் ஒவ்வோர் அளவில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களை பொருத்து காரை தேர்தெடுக்கலாம். சிறிய கார்களில் 6 நபர்கள் பயணிக்க முடியாது. இடவசதி இல்லாமல் கார்கள் வாங்கினால் அது எப்போதும் மகிழ்ச்சியான உணர்வை அளிக்காது. மேலும் கூடுதலாக கார்களில் லட்கேஜ்கள் வைக்கும் இடம் பெரிதாக உள்ளதா என கவனித்தும் வாங்க வேண்டும்.

மைலேஜ் மற்றும் பாதுகாப்பு:

எந்த வாகனமாக இருந்தாலும் அனைவரும் கவனிக்கும் முதல் விஷயம் அதன் மைலேஜ் தான். எப்போதும் வாங்க போகும் வாகனத்தின் மைலேஜ் அதன் விலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரியானது தான். ஒரு குடும்பத்திற்கு வாங்கும் சீடன் வகை பெட்ரோல் வாகனம், நகரத்திற்குள் 15 கிமீ வரைக்கும், நெடுஞ்சாலைகளில் 20 கி.மீ வரைக்கும் மைலேஜ் கொடுப்பதாக இருந்தால் நல்லது. வாகனத்தின் வகைக்கும், அளவிற்கும் ஏற்பவும் மைலேஜ்கள் மாறும்.

தற்போது வரும் அடிப்படை கார்களில் கூட அனைத்து வசதிகளுடன் வருகின்றன. அதனால் தங்கள் பட்ஜெட்டிற்குள் தேவையான அனைத்து ஃபீச்சர்களும், பாதுகாப்பு வசதிகளும் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். அடிப்படை மாடல் கார்களிலுமே ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, ஏர்பேக், சீட்பெல்ட்ஸ் போன்றவை பாதுகாப்பு அம்சங்கள் வடிவமைக்கப்படுகின்றன. காரின் மைலேஜ் கவனிப்பதைப் போலவே பாதுகாப்பு அம்சங்களும் அவசியம்.

கடனில் கார் வாங்கலாமா?

ஆசையாக கார்களை வாங்கும் நடுத்தரப் குடும்பத்தினர் பெரும்பான்மையானவரும் லோனிலேயே கார்களை வாங்குகின்றனர். ஒரு சிலர் மொத்த தொகையையும் செலுத்தி கார்களை வாங்குகின்றனர். ஆனால் கார்களை வாங்குவதற்கு சிறந்த வழியாக உள்ளது கார்களுக்கென்று தனியாக சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். பின் சேமித்த தொகையை முழுவதுமாக எடுத்து கார் வாங்காமல் அந்த தொகையில் சிலவற்றை வேறு முதலீட்டில் போட்டு மீதத்தில், மாதம்தோறும் இஎம்ஐ கட்டும் விதத்தில் கார் வாங்க வேண்டும். முதலீடு செய்த தொகை லாபகரமானதாக இருக்கும். சேமிப்பின்றி காரை, மாத வருமானத்தை மட்டும் நம்பி வாங்க வேண்டாம். கார்கள் ஒரு போதும் முதலீடாகாது. Shohaly Akhter: உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோஹாலி அக்தர் 5 ஆண்டுகள் தகுதிநீக்கம்.!

புதிய மாடல் vs பழைய மாடல்:

சந்தைக்கு புதிதாக வருகிறது நன்றாக இருக்கும் என்று நினைத்து கார்களை வாங்க கூடாது. ஒரு வேளை அதற்கு நல்ல வரவேற்ப்பு இல்லையெனில் அந்த மாடல் உற்பத்தியை நிறுத்தி விடுவர். உற்பத்தி நிறுத்தப்படும் கார் மாடல்களை தவிர்த்து விடுவது நல்லது. இது இந்த கார்களின் பார்ட்ஸ் பிற்காலத்தில் தனியாக வாங்க நினைத்தால் அந்நேரத்தில் கிடைக்காமல் சிரமப்பட வேண்டிவரும். காரையே மற்ற வேண்டியும் வரும். அதற்காக பழைய மாடல் காரை வாங்க வேண்டும் என்றில்லை. அனைவரிடமும் அதிக வரவேற்ப்பு பெற்ற காரின் மாடலில் அப்டேட் வர்ஷனை வாங்கலாம். நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் மற்றும் கார் மாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

டீலர்களையும் தேர்ந்தெடுங்கள்:

கார் வாங்க போகும் முன் எந்த ஷோரூம், எந்த டீலர்களிடம் கார் வாங்கலாம் என சற்று ஹோம் வொர்க் செய்யலாம். இண்டர்நெட்டில் பல டீலர்கள் இருக்கின்றனர். பலரும் சலுகைகள், தள்ளுபடிகள் என தருகின்றனர். அனைத்தையும் ஃபோன்கள் மூலமே ஆரம்பத்தில் விசாரிக்கலாம். நம்பகத் தன்மையுள்ள டீலர்களிடம் கார்களை வாங்க வேண்டும். கார் வாங்க போகும் டீலர்கள், ஷோரூம்கள் அங்கீகரிக்கப்பட்டதா என கவனித்து வாங்க வேண்டும்.

முன்பதிவு செய்து காரை எடுப்பது சில ஆயிரங்கள் இழக்காமல் பார்த்துக் கொள்ளும். சில ஷோரூம்களில் வார்ண்ட்டி, சர்வீஸ்கள் இலவசமாக செய்து தருவார்கள். அது போன்ற சலுகைகள் உள்ளதா என விசாரிக்கலாம்.

டெஸ்ட் டிரைவ்:

நேரில் சென்று காரை பற்றி தெரிந்துகொண்டு டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். வாகனத்தை வெறும் ஒரு கிலோமீட்டர் மட்டும் ஓட்டிப் பார்த்து ஓகே சொல்லிவிடாமல், நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் ஓட்டிப்பார்க்க வேண்டும். மேலும் அனைத்து ஆப்ஷன்களை பயன்படுத்திப் பார்க்கலாம். கார்களில் பாசிட்டிவ் நெகட்டிவை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இதன் இயக்கத்தையும், செயல்திறன் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.

கண்டிப்பாக பேரம் பேசலாம்:

சாதாரணமான பொருளை வாங்கினாலே பேரம் பேசும் நாம் லட்சக்கணக்கில் போட்டு வாங்கும் கார்களிற்கு பேரம் பேசாமல் இருப்பதா? தாயங்காமல் வாங்கவிருக்கும் காரிற்கு பேரம் பேசலாம். ஆனால் அதற்கு முன் அந்த மாடல் காரைப் பற்றி தெரிந்து கொள்வது சிறந்தது. அதன் ஒரிஜினல் சந்தை விலை பற்றி தெரிந்து கொண்டு, அதிலிருந்து நியாயமான முறையில் பேரம் பேசி குறைக்கலாம்.

பேப்பர் ஒர்க்ஸில் கவனம் தேவை:

கார்கள் வாங்கும் போது பல பேப்பர்களில் கையெழுத்துக்கள் வாங்குவர். ஒரு பக்கத்தையும் படிக்காமல் கையெழுத்திட வேண்டாம். புதிய விதத்தில் எழுதியிருந்தால் அதற்கான விளக்கத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் வாகனத்திற்கான ஆவணங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இதன் வரிகள் குறித்து காரை வாங்கும் முன்ரே தெரிந்து கொள்வது அவசியம்.

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

கார்களை ஷோரூமில் பார்க்கும் போது அதன் நிறம், மாடல், அனைத்தையும் கவனிக்க வேண்டும். வீடிற்கு கார் வந்ததும் ஷோரூமில் தேர்ந்தெடுத்த கார் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்ததும் ஒரு முறை அதை சோதித்துக் கொள்ள வேஎண்டும். ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக கடைகளில் தெரிவிக்க வேண்டும். தூரத்தில் இருந்து டெலிவரி செய்யும் போது சேதமடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பின் காரை வாங்கலாம். தேவையறிந்து கார் வாங்கும் போது பட்ஜெட்டிற்குள்ளும் குடும்பத்திற்கு பொருத்தமானதையும் கண்டறியலாம்.