Ranya Rao Arrested: ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை கடத்தி வசமாக சிக்கிக்கொண்ட தமிழ் பட நடிகை.. பெங்களூரில் கைது.!
தொடைக்கு அடிப்பகுதியில், நடிகை ரன்யா ராவ் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தினார். அவர் சுங்கத்துறை சோதனையின்போது சிக்கிய காரணத்தால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மார்ச் 06, பெங்களூர் (Cinema News): கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை ரன்யா ராவ் (Ranya Rao). இவர் கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகிய மன்கியா படத்தில், கிச்சா சுதீப்பின் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். தமிழ் மொழியில், கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில், இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையை மையப்படுத்தி உருவாகிய வாகா (Wagah Tamil Movie) திரைப்படத்தில் இவர் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், வெளிநாடு சென்ற நடிகை ராவ், பெங்களூர் விமான நிலையம் திரும்பினார். Kingston Full Album Song: ஜிவி பிரகாஷின் கிங்ஸ்ட்ஸ்ன் திரைப்படம் நாளை வெளியீடு; முழு பாடல் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
14.2 கிலோ தங்கம் கடத்தல்:
அப்போது, நடிகை ரம்யா ராவ் (Ranya Rav Gold Smuggling Case) தனது தொடை பகுதியில் தங்கத்தை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.12 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்து கைப்பற்றினர். தங்கத்தை ஸ்டிக்கர் வைத்து மறைத்து கடத்தி வந்த நடிகை, அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நடிகை ரம்யா ராவ், சாதின் ஹுக்கேரி (Jatin Hukkeri) என்ற கட்டிட வடிவமைப்பாளரை திருமணம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)