Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் சீசன் 8ல் விஜயின் கோட் பட பாடலுக்கு நடனமாடும் சுனிதா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?.. வெளியான தகவல்..!

விஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு, நடிகை சுனிதா நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg Boss Tamil 8 | Sunitha Gogoi (Photo Credit: @EVTimesTV / @VijayTelevision X)

அக்டோபர் 05, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை சுனிதா. இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்தது. இவர் கடந்த 2010ம் ஆண்டு ஜோடி நம்பர் சீசன் 5-ல் கலந்துகொண்டு நான்காவது இடத்தை பெற்று, அதனைத்தொடர்ந்து பலகட்டமாக அந்நிகழ்ச்சியில் பல்வேறு சீசனில் கலந்துகொண்டு இருந்தார். பல காலங்களாக விஜய் டிவியை பின்தொடர்ந்து இருந்தவர், பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு இருந்தார் எனினும், அவருக்கு குக் வித் கோமாளி நல்ல அடையாளத்தை பெற்றுத்தந்தது. Actress Sona: நடிகை சோனாவின் வீட்டில் ஏசி திருட்டு முயற்சி; 2 பேர் கைது.. காவல்துறையினர் அதிரடி.! 

நடிகை சுனிதா கலந்துகொள்கிறார்?

சின்னத்திரை மட்டுமல்லாது தனுஷ் - சுருதி ஹாசனின் நடிப்பில் வெளியான 3, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 உட்பட பல படங்களிலும் அவர் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில், நடிகை சுனிதா கோகாய் (Sunitha Gogoi) பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்பட பாடல் ஒன்றில் நடனமாடி தனது அறிமுகத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானது இல்லை எனினும், நம்பத்தகுந்த சினி வட்டாரங்களில் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது என்பதால், ஏறக்குறைய உறுதியாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பணியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படியாயினும் நாளை இரவுக்குள் உண்மை தெரிந்துவிடும் என்பதால் காத்திருப்போம்.

பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil Season 8) பற்றி சுருக்கமாக:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு மக்கள் வழங்கும் அதிகாரத்தை பொறுத்து இறுதிப் போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். கடந்த 7 சீசன் நடிகர் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்துவதாலும் பிக் பாஸ் சீசன் 8ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அக்.06ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனை விஜய் தொலைக்காட்சி, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆகிய செயலிகளில் நேரலையை கண்டுகளிக்கலாம்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif