Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய குட் பேட் அக்லீ படத்தின் அப்டேட்; லீக்கான ஸ்டில்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இதனை இயக்குனரும் பெருமிதத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
டிசம்பர் 15, கோடம்பாக்கம் (Cinema News): திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் பிரபலமான இயக்குனராக அறியப்பட்டவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவர் தற்போது திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான, அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித் குமாரை (Ajith Kumar) வைத்து குட் பேட் அக்லீ (Good Bad Ugly) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ரூ.225 கோடி பட்ஜெட்:
அஜித்குமாரின் 63 வது திரைப்படமான குட் பேட் அக்லீயை, மைத்ரி மூவிஸ் மேக்கர் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ரூபாய் 225 கோடி செலவில், ஜி.வி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இப்படம் உருவாகி வருகிறது. Radhika Apte: பெண் குழந்தையை பெற்றெடுத்த ரஜினி பட நடிகை... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
விரைவில் வெளியீடு:
இப்படத்தில் நடிகர்கள் அஜித்குமார் (Ajith Kumar AK), திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், யோகி பாபு உட்பட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ஸ்பெயின் என பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 2025 பொங்கல் அல்லது கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புடன் இறுதி கட்டப் பணிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
அஜித் குமாரின் படப்பிடிப்பு நிறைவு:
இந்நிலையில், இன்றுடன் நடிகர் அஜித்குமாரின் பாகம் இடம்பெறும் காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உறுதி செய்துள்ளார். இப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. குட் பேட் அக்லீ படத்தின் ஆன்லைன் வெளியீடு ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் ரூபாய் 95 கோடி கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.
நடிகர் அஜித் சால்ட் / பெப்பர் லுக்கில், இளமையான தோற்றத்தில் இடம்பெற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. மங்காத்தாவுக்கு பின் ஒரு மாஸ் சம்பவத்திற்கு குட் பேட் அக்லீ படம் காத்திருப்பதாகவும் சினி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குட் பேட் அக்லீ திரைப்படத்தில், நடிகர் அஜித் குமாரின் இறுதி நாள் காட்சி படமாக்கப்பட்டதாக அறிவிப்பு: