Kalki 2898 AD Release Date: இந்திய வரலாற்றில் முதல் முறை.. பிரம்மாண்டத்தின் நாயகன் பிரபாஸின் கல்கி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!

மக்களின் எண்ணங்கள் மாறும்போதெல்லாம், திரைத்துறையும் தன்னை தகவமைத்துக்கொண்டு செயல்படுவதால் உலக சினிமா நம்வசம் ஆகிறது. அதற்கு அடையாளம் உலகளவில் இந்திய திரைப்படங்கள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதே ஆகும்.

Kalki 2898 AD Release Date: இந்திய வரலாற்றில் முதல் முறை.. பிரம்மாண்டத்தின் நாயகன் பிரபாஸின் கல்கி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
Kalki 2898 AD (Photo Credit: Instagram)

ஜனவரி 12, சென்னை (Cinema News): நாக் அஸ்வின் இயக்கத்தில், சி. அஸ்வனி தத் சார்பில் வைஜயந்தி மூவிஸ் தயாரித்து வழங்கும் பிரம்மாண்டமான திரைப்படம் கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD). ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவிக்கப்பட்டு வரும் கல்கி திரைப்படம் ரூ.600 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங்கில், ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவில் படம் உருவாகி இருக்கிறது.

கல்கி படக்குழு: படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன் கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சாஸ்வத சட்டர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டே பிரபாஸின் நடிப்பில் கல்கி திரைப்படம் தயாராகுவது உறுதி செய்யப்பட்டாலும், அடுத்தடுத்து கொரோனா உட்பட பல காரணங்களால் அவை தள்ளிப்போய், கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின், தற்போது படம் வெளியீடுக்கு தயாராகி இருக்கிறது. Wuhan Confirms New Dangerous Virus: வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு: உகான் ஆய்வகம் அதிர்ச்சி தகவல்..! 

ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்டமான திரைப்படம்: ப்ராஜெக்ட் கே என முதலில் பெயரிடப்பட்டு இருந்த திரைப்படம், பின்னாளில் கல்கி என அறிவிக்கப்பட்டது. படத்தின் இசையமைப்பு பணிகளுக்கு ஏ.ஆர் ரஹ்மான் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் படம் உருவாகுவது உறுதி செய்யப்பட்டது. இப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் முதல் திரைப்படம் ஆகும். ரூ.600 கோடி (75 மில்லியன் அமெரிக்கா டாலர்) பட்ஜெட் இந்திய அளவில் இப்படத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: உலகத்தரம் வாய்ந்த பல புதிய தொழில்நுட்பங்கள் இப்படத்தில் உபயோகம் செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே படத்தின் செலவுகள் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் கல்கி திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டும். இந்நிலையில், படம் வரும் மே 9, 2024 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "6000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த கதை, மே 9, 2024 அன்று தொடங்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement