Salman Khan: சல்மான் கானின் படப்பிடிப்பில் பாதுகாப்பு பிரச்சனை; தாதா லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை சொன்ன நபர்..!

அத்துமீறி படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்து, லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை பயன்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Salman Khan | Lawrance Bishnoi (Photo Credit: @ANI X)

டிசம்பர் 04, மும்பை (Cinema News): கடந்த 1998ம் ஆண்டு ஜோத்பூர் பகுதியில் சல்மான் கானின் படப்பிடிப்பு நடந்தபோது, நடிகர் சல்மான் கான் உட்பட படக்குழுவினர், மானை வேட்டையாடியதாக தெரியவருகிறது. அப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பீஷ்னோய் மக்களின் வாழ்வியல் அங்கமாக, தெய்வமாக மான் இருந்து வந்த நிலையில், சல்மானின் செயல்பாடுகள் கடும் அதிர்ச்சியை அம்மக்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் சல்மானை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 25 ஆண்டுகளாக அம்மக்களில் ஒரு தரப்பு ஒருங்கிணைந்துள்ளது. Pushpa 2: புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுன் என்ட்ரி காட்சிகள் கசிந்தது; லீக் வீடியோ வைரல்.. படக்குழு அதிர்ச்சி.!

காவல்துறையினர் வசம் ஒப்படைப்பு:

அப்படியாக, பிரபல ரௌடியாக வலம்வரும் லாரன்ஸ் பீஷ்னோய் குழு, கடந்த 2022ம் ஆண்டு முதல் தனது செயல்பாடுகளை தொடங்கியது. அன்றில் இருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் அவரை பாதுகாக்க காவல்துறை சார்பில் பிரத்தியேக குழுவும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, மும்பை, தாதர், சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு ஒன்றில், மர்ம நபர் அத்துமீறி நுழைந்தார். அங்கு லாரன்ஸ் பீஷ்னோய் பெயரை பயன்படுத்தி கேள்வி எழுப்பியதாக தெரியவருகிறது. இதனால் அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif