Actress Janhvi Kapoor: தாயாரின் பிறந்தநாளில் அன்புள்ள அம்மாவை நினைவுகூர்ந்த ஸ்ரீதேவி மகள்; நெகிழ்ச்சி பதிவு..!

21 வயதில் தனது தாயை இழந்த மகள், தாயாரின் பிறந்தநாளில் அவரை நினைத்து நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளார். மகளின் பாசப்பிணைப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Actress Sri Devi With Mother (Photo Credit: Janvhi Kapoor Instagram)

ஆகஸ்ட் 14, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் கோலோச்சிய தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீ தேவி (Actress Sri Devi) - தயாரிப்பாளர் போனி கபூரின் (Boney Kapoor) மகள் ஜான்வி கபூர் (Janhvi Kapoor). இவர் ஹிந்தி திரையுலகில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். கடந்த 2018ல் இவரின் நடிப்பில் வெளியான Dhadak திரைப்படம் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து, Ghost Stories, Good Luck Jerry, Bawal ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள Mr. & Mrs. Mahi, Devara, Ulajh ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. திரைத்துறைக்கு அவர் பரிட்சயமாகி சில ஆண்டுகளே ஆனாலும் Lokmat Stylish Awards, Zee Cine Awards, Pinkvilla Style Icons Awards, Bollywood Hungama Style Icons ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஜான்வி கபூருக்கு 21 வயது இருக்கையில், அவரின் தயாரான ஸ்ரீதேவி கடந்த 24 பிப்ரவரி மாதம் 2018ல் மர்மமான முறையில் துபாயில் தங்கியிருந்த அறையில் உயிரிழந்தார். இவரின் மறைவு திரைஉலகத்தையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. தமிழகத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான படங்களில் நடித்து பெருமைமிகு நடிகையாக ஸ்ரீதேவி இருந்து வந்தார். Velachery Apartment Fire: வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

இந்த நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதியான நேற்று நடிகை ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் ஆகும். இந்த நாளில் தனது தாயை நினைவு கூர்ந்த நடிகை ஜான்வி கபூர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. உங்களுக்கு மிகவும் பிடித்தது திரைப்படங்களில் நடிப்பது, படப்பிடிப்பில் இருப்பது என்பது எனக்கு நன்கு தெரியும்.

இன்று நான் உங்கள் பிறந்தநாளின் படப்பிடிப்பில் இருப்பதால், முன்னெப்போதையும் விட நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இது உங்கள் 35 வது பிறந்தநாள் என்றும், 60 வது பிறந்த நாள் அல்ல என்றும் நாங்கள் அனைவரையும் நம்ப வைக்க முடியும்.

நான் சரியாக பயணிக்கிறேனா? இல்லையா? என்பதை நீங்கள் என்னிடம் சொல்லலாம். நான் உன்னை பெருமைப்படுத்துகிறேனா? என்பதை உங்களின் கண்களில் பார்க்க முடிந்தது. உங்கள் நினைவாக நாங்கள் முயற்சிப்பதைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று எனக்குத் தெரியும். தினமும் நான் உன்னை நேசிக்கிறேன்.

நீங்கள் இந்த கிரகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பெண். நீங்கள் இன்னும் எங்களுடன் இருப்பதை நான் அறிவேன். நாங்கள் தொடர்ந்து செல்வதற்கு நீங்கள் தான் காரணம். இன்று நீங்கள் நிறைய பாயாசம் மற்றும் ஐஸ்கிரீம்கள் மற்றும் கேரமல் கஸ்டர்ட் சாப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now