Pushpa 2: புஷ்பா 2 படத்தில், அல்லு அர்ஜுன் என்ட்ரி காட்சிகள் கசிந்தது; லீக் வீடியோ வைரல்.. படக்குழு அதிர்ச்சி.!
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 04, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. Naga Chaitanya and Sobhita Dhulipala: பாரம்பரிய முறைப்படி முடிந்த திருமணம்; கொண்டாட்டத்தில் நாக சைதன்யா - சோபிதா தம்பதி.!
நாளை படம் வெளியீடு:
இதனையடுத்து, படத்தின் புஷ்பா இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று (நாளை) படம் வெளியிடுவது உறுதி செய்யப்பட்டது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பே இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி, உலகளவில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. புக்கிங் முறையில் மட்டும் இத்தொகை வசூல் ஆகியுள்ளது. புக் மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றுள்ளது.
என்ட்ரி காட்சிகள் வெளியானது:
இந்நிலையில், புஷ்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு சென்றிருந்த ரசிகர்கள் எடுத்த அல்லு அர்ஜுனின் என்ட்ரி தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், படத்தின் சஸ்பென்ஸ் உடைவதாக படக்குழு மற்றும் அதற்கு ஆதரவானோர் விடியோவை டெலீட் செய்யவும் வற்புறுத்துகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுனின் என்ட்ரி தொடர்பான வீடியோ: