Annie Wersching Died Cancer: 45 வயதில் கேன்சரால் பிரபல அமெரிக்க நடிகை மரணம்.. சாகும் தருவாயிலும் நடிப்பில் விடாத நாட்டம்.!

புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டாலும் தனக்கு அடையாளம் கொடுத்த நடிப்பின் மீது காதலியாக இருந்த நடிகை, 45 வயதில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றார். கேன்சர் இருந்தபோதிலும் துள்ளல் மனதுடன் நடிப்பில் நாட்டத்துடன் இருந்து மறைந்த நடிகையின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

American Actress Annie Wersching (Photo Credit: Wikipedia)

ஜனவரி 30, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels): அமெரிக்காவில் உள்ள மிசௌரி, எஸ்.டி., லூயிஸ் (St. Louis City, Missouri, America) நகரில் மார்ச் 28, 1977ல் பிறந்த நடிகை அன்னி வெர்ஷிங் (Annie Wersching). இவர் அமெரிக்க சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய Star Trek என்ற அறிவியல் சார்ந்த நெடுந்தொடரில் கலந்துகொண்டு பிரபலமானார்.

அதனைத்தொடர்ந்து, Renee Walker, The Vampire Diaries, 24, Bosch உட்பட பல தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி (Television & OTT Platform) தளங்களில் வெளியாகும் தொடர்களில் நடித்துள்ளார். Sony PlayStation-ல் வெளியான The Last of Us உட்பட பல வீடியோ கேம்களுக்கு குரல் மற்றும் பின்னணி காட்சிகளை பதிவிட நடித்து கொடுத்துள்ளார்.

கடந்த 2010ல் வெளியான Below the Beltway படத்தில் இவர் கிரேசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைத்துறையில் அடியெடுத்து வைத்ததில் இருந்து முழுநேர தொலைக்காட்சி நடிகையாக இவர் நடித்தாலும், அதுவே அவருக்கு பெரிய புகழை கொண்டு வந்து சேர்த்தது. Child Marriage Stopped: குழந்தை திருமணம் செய்ய முயன்றவர் உட்பட 3 பேர் அதிரடி கைது.. மாலையும் கழுத்துமாக கரம்பிடிப்பதற்குள் கம்பிவைத்த சிறைக்குள் தள்ளிய அதிகாரிகள்.!

கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்காவின் நகைச்சுவை நடிகரான ஸ்டீபன் புல்லை (Stephen Full) திருமணம் செய்து வாழ்ந்து வந்த அன்னிக்கு 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இன்று வரை பிரியாது காதலோடு வாழ்ந்து வரும் அமெரிக்க ஜோடிகளில் ஒருவராகவும் இருக்கின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் நடிகை அன்னிக்கு அடையாளம் தெரியாத புற்றுநோய் (Unspecified Cancer) இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அதற்கான சிகிச்சைகள் எடுத்து வந்தபோதிலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நகரில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த நடிகை அன்னி வெர்ஷிங் புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவை குடும்பத்தினர் உறுதி செய்ததை தொடர்ந்து, பலரும் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அன்னியின் மூத்த மகனுக்கு 14 வயது ஆகிறது, பிற 2 குழந்தைகளும் 4 வயதுடைய இரட்டையர்கள் ஆவார்கள்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 30, 2023 11:28 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now