AR Rahman History: யார் இந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்?.. சோதனைகளை சாதனையாக்கிய வெற்றி நாயகன்.!
தனது சிறு வயதிலேயே இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இளையராஜாவுடன் பல இசைப்பணிகளை செய்ய தொடங்கிய ஏ.ஆர் ரஹ்மான், கடந்த 1990ல் வெளியான ரோஜா பாடலில் இருந்து தனது திரையுலக இசையமைப்பு பணிகளை தொடங்கி பம்பாய், நகர்ப்புற காதலன், திருடா திருடா, ஜென்டில்மேன் படங்களுக்கு இசையமைத்துக்கொடுத்து பெருமிதப்படவைத்தார்.
டிசம்பர், 7: சென்னையில் அல்லாஹ் ரக்கா ரஹ்மான் (A.R. Rahman) என்ற ஏ.எஸ் திலீப் குமார், கடந்த ஜனவரி 6, 1967ல் ஆர்.கே சேகர் - கஸ்தூரி இணையருக்கு மகனாக பிறந்தார். தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர் ரஹ்மானுக்கு முதலில் படிப்பும் வரவில்லை. அவரின் தாயாரை நேரில் அழைத்த பள்ளி நிர்வாகம், கோடம்பாக்கம் சாலையில் உங்களின் மகனை பிச்சையெடுக்க அனுப்புங்கள் என்று கூறி கண்டித்து இருக்கின்றனர்.
தாயின் படிப்பாசையும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையாசையும்: இதனால் மகனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கஸ்தூரி @ கரீமா தனது மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அது எதிர்பார்த்த அளவு கைகூடவில்லை. தனது இளம்வயதில் இருந்து இசையின் மீது கொண்ட ஆர்வம், சூழ்நிலை போன்றவை ஏ.ஆர் ரகுமானை பெரும் இன்னலை சந்திக்க வைத்தது. தனது 20 வயதில் குடும்பத்துடன் திலீப் குமாராக இருந்தவர் இஸ்லாமிய சிந்தாந்ததால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறிய திலீப், தனது பெயரை ஏ.ஆர் ரஹ்மான் என மாற்றிக்கொண்டார்.
நண்பர்களோடு தொடங்கிய இசைப்பயணம்: அவர் தனது குடும்பத்தினருடன் மதம் மாறி, அக்கா மகளை திருமணம் செய்துகொண்டார். தனது இளமைக்கால நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான் ஆண்டனி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ ஆகியோருடன் சேர்ந்து சிறிய அளவிலான இசைக்குழுவை தோற்றுவித்த ஏ.ஆர். ரஹ்மான் விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களுக்கு இசையமைத்து கொடுத்தார். தனது சிறு வயதிலேயே இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இளையராஜாவுடன் பல இசைப்பணிகளை செய்ய தொடங்கினார்.
கடந்த 1990ல் வெளியான ரோஜா பாடலில் இருந்து தனது திரையுலக இசையமைப்பு பணிகளை தொடங்கிய ஏ.ஆர். ரஹ்மான், பம்பாய், நகர்ப்புற காதலன், திருடா திருடா, மற்றும் ஜென்டில்மேன் போன்ற படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து கொடுத்து தனக்கென தனி இடத்தை பெற தொடங்கினார். இன்றளவில் ஏ.ஆர் ரஹ்மான் உலகளவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். பல பாடல்களை பாடியுள்ளார். Morning Lazy: அச்சச்சோ.. காலையில் எழுந்ததும் சோர்வாக இருப்பது ஏன்??.. பதறவைக்கும் தகவல்.. மக்களே நிம்மதியாக உறங்குங்கள்..!
திரையின் காந்தம் ரஜினி-இசையின் காந்தம் ஏ.ஆர். ரஹ்மான்: அவரின் இசைப்பணிக்காக 6 தேசிய திரைப்பட விருதுகள், 2 அகாடமி விருதுகள், 2 கிராமி விருதுகள், BAFTA விருது, Golden குளோப் விருது, 15 பிலிம்பேர் விருது, 17 தென்னிந்திய பிலிம்பேர் விருது, பத்ம பூஷன் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். தனது வாழ்நாட்களில் தான் பட்ட துயரத்தை யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் பலருக்கும் நேரடி, மறைமுக உதவிகளை செய்கிறார்.
தனது இசைப்படைப்புகள், ஏ.ஆர்.ஆரின் காந்த குரலுக்கு கிடைத்த மதிப்பும், மரியாதையும் விண்ணளவு கடந்தாலும் அளக்க இயலாதது. தனது குரல் வலிமையால் பல நாடுகள் சென்று பல மொழிகளில் பாடல் பாடி அவர் புரிந்த சாதனைகள் ஏராளம். என்று தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காத தமிழ் பற்றுள்ள திரைபிரபலங்களில் இவர் முதன்மையானவர். ரோஜாவில் தொடங்கிய இசைப்பயணம் பொன்னியின் செல்வன் வரை என 150 படங்களுக்கும் மேல் அவர் இசையமைத்து இருக்கிறார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 02:53 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)