Sivakarthikeyan in BB Tamil House: போடு தகிட., தகிட.. பிக் பாஸ் இல்லத்திற்குள் அமரன் சிவகார்த்திகேயன்.. கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள், ரசிகர்கள்.!
இராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமரன் திரைப்படம் வரும் அக்.31 அன்று வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 21, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் தொடங்கியது. நடப்பு சீசன் நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே வீட்டிற்குள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். முதல் வாரத்தின் முதல் எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!
சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள்:
இந்நிலையில், பிக் பாஸ் பிபி ஹோட்டல் டாஸ்கில் போட்டியாளர்கள் ஈடுபட்டு களைத்துப்போன நிலையில், அவர்களை உருச்சிக்கப்படுத்தும்பொருட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சிறப்பு விருந்தினராக சென்றார். அவர் பிக் பாஸ் இல்லத்திற்குள் சிறப்பு விருந்தினராக சென்று, பின் அமரன் படத்தின் ப்ரோமோஷனிலும் ஈடுபட்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரிகளின் கதையம்சத்தை கொண்ட அமரன் திரைப்படம், வரும் அக்டோபர் 31 அன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகிறது. இதன் ப்ரோமோஷன் பணிகளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் பிக் பாசுக்குள் வந்துள்ளார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் சிவகார்த்திகேயன்: ப்ரோமோ 3
அமரன் படத்தின் ட்ரைலர் காட்சிகள்:
மக்கள் தங்களை தேர்வு செய்யட்டும் என போட்டியாளர்கள் முடிவு: ப்ரோமோ 2
நாமினேஷன் ப்ரீ டாஸ்கில் வெற்றிபெற்ற பெண்கள் அணி: ப்ரோமோ 1
அமரன் திரைப்படம் பற்றி சுருக்கமாக:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்து வழங்கியுள்ள அமரன் (Amaran) திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகை சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமரன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.