Bigg Boss Tamil Season 8: "அவ்வுளவுதான் பார்த்துக்கோங்க" - ராணவ், ராயனுக்கு உச்சகட்ட கண்டனம்.. வச்சி செய்த விஜய் சேதுபதி.!
நெட்டிசன்கள் பிரியாணி விவகாரத்தை கேட்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், விஜய் சேதுபதி அதனை சிறிய பிரச்சனையாக கேட்டு முடித்துவைத்தார்.
டிசம்பர் 01, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழச்சி, தற்போது 56வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் இல்லத்திற்குள் ஆனந்தி, அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்லின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, தர்ஷிகா, விஷால், ஷிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷா, அர்ணவ், ரவீந்தர் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்களில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றபட்டனர். Bigg Boss Tamil Season 8: இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்தான்; வெளியானது தகவல்..!
ரெட் கார்டு எச்சரிக்கை:
அதனைத்தொடர்ந்து, இந்த வாரம் ஒருவர் இன்று (1 டிசம்பர் 2024) வெளியேற்றபடவேண்டும் என்ற நிலையில், பிக் பாஸ் பொம்மை டாஸ்க் மூலமாக ஷிவாவை வெளியேற்றினார். மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற ஷிவகுமார், வீட்டில் இருந்து வெளியேறினார். இன்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி ராணவ் மற்றும் ராயன் பொம்மை டாஸ்கின் போது நடந்துகொண்ட விதத்தை கண்டித்து, இனி இவ்வாறான செயலில் ஈடுபட்டால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கண்டித்து இருந்தார்.
பிரியாணி குழு:
அதேபோல, நெட்டிசன்கள் பலரும் சாச்சனா குறித்து பல கேள்விகளை முன்வைத்த நிலையில், விஜய் சேதுபதி தனது அடக்கமான பதிலை சாச்சனாவுக்கு வழங்கி இருந்தார். மேலும், பிரியாணி குழுவை பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பச் சொல்லி இருந்த நிலையில், உணவு விவகாரம் என்பதால், அதனை சிரிப்பாக தொடங்கி அமைதியாக முடித்து வைத்தார். இதன் வாயிலாக பிக் பாஸ் வீட்டிற்குள், பிற போட்டியாளர்களுக்கும் பிரியாணி குழு தொடர்பாக தெரியவந்தது.
ராணவ்-ராயன் சண்டையிட்ட காணொளி:
ஜெப்ரியுடன் கடுமையாக சண்டையிட்ட போட்டியாளர்கள்: