Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ரஞ்சித்? அன்ஷிதா - விஷால் கூட்டணியை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.!
விஜே விஷால் - அன்ஷிதா தங்களின் நட்பு பாராட்டி செயல்பட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் போட்டியாளர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.
டிசம்பர் 22, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர்.
நாமினேஷன் லிஸ்ட்:
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ராயன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தீபக், மஞ்சரி, முத்துக்குமரன், ராணவ், ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த வாரம் நடந்த போட்டிகளில், பயங்கர வாக்குவாதங்களும் போட்டியாளர்களுக்கு இடையே உருவாகியது. கேப்டன் டாஸ்கில் முத்துக்குமரன் அன்ஷிதாவுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால், பிக் பாஸ் கடும் கோபத்தில் போட்டியாளர்களை வறுத்தெடுத்து இருந்தார். Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!
ரஞ்சித் வெளியேறுகிறார்?
இதனிடையே, வாரத்தின் இறுதி நாளான நேற்று சனிக்கிழமை, தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வறுத்தெடுத்து இருந்தார். அன்ஷிதாவின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தும் இருந்தார். போட்டியின்போது ராணவ்-க்கு காயமும் அடைந்து இருந்தது. அன்ஷிதா ராணவ் போல காயம் அடைந்ததாகவும் நடித்திருந்தார். இந்த விஷயத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. விஷாலின் கேப்டன்ஷி குறித்து போட்டியாளர்கள் தங்களின் கண்டனத்தையும் தெரிவித்து இருந்தனர். விஷால் அன்ஷிதாவுக்கு பல இடங்களில் விட்டுக்கொடுத்து செயல்பட்டு இருந்தார். இந்நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஞ்சித் வெளியேறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.