டிசம்பர் 21, பெங்களூரு (Sports News): இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா (Former Cricketer Robin Uthappa), பெங்களூருவில் சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Centaurus Lifestyle Brands Private Ltd) எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக பிஎப் (PF) பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. சுமார் ரூ.23 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, உத்தப்பாவுக்கு நோட்டீஸ் வழங்க பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர் அங்கு இல்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர் உத்தப்பா மீது கைது வாரண்ட் (Arrest Warrant) பிறப்பித்து, அவரை கைது செய்யுமாறு EPFO ஆணையர் ஷடாக்ஷிரி கோபாலா ரெட்டி, புலகேசி நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். RSA Vs PAK 2nd ODI: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி.. கிளாசனின் போராட்டம் வீண்..!

ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)