Bigg Boss Tamil Season 8: சௌந்தர்யாவுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க கூடாது? - முத்துக்குமரன் பதில்.. ப்ரோமோ இதோ.!
தொகுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, இறுதியில் அவர்களை கோர்த்துவிடும் வகையில் செய்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
டிசம்பர் 29, ஈவிபி பிலிம் சிட்டி (Cineman News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா (Soundarya), விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர். Bigg Boss Tamil Season 8: குடும்பத்தினரின் விளக்கம் போட்டியாளர்களுக்கு புரியவில்லையா? - எவிக்சன் யார்? விபரம் இதோ.!
ஜெப்ரி வெளியேறினார்:
இந்த வார நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ராணவ், விஜே விஷால், ஜெப்ரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும், தங்களின் குடும்பத்தவரை சந்தித்து ஆலோசனை, கண்டனம் என கடந்த வாரத்தை பரபரப்பாகி இருந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பு பெற்றது. நேற்று சனிக்கிழமை தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் தனது விவாதத்தை முன்வைத்து இருந்தார். இந்த வாரத்தில் டபுள் எக்விக்ஸன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று ஜெப்ரி வெளியேறினார். இதனால் இன்று அன்ஷிதா எவிக்சன் முறையில் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இன்று வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் மக்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என நீங்கள் நினைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். இதனைக்கேட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற பதில் ஒன்றை சொல்ல, முத்துகுமாரனோ சௌந்தர்யாவுக்கு எதிராக தனது கருத்தை முன்வைக்கிறார்.