Bigg Boss Tamil Season 8 | Day 83 Promo (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 28, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா (Soundarya), விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர். இந்த வார நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ராணவ், விஜே விஷால், ஜெப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும், தங்களின் குடும்பத்தவரை சந்தித்து ஆலோசனை, கண்டனம் என கடந்த வாரத்தை பரபரப்பாகி இருந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பு பெற்றது. இன்று சனிக்கிழமை தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் பேசுகிறார். மேலும், இந்த வாரத்தில் டபுள் எக்விக்ஸன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் போட்டியாளர்களுடன் அன்பு உறவை ஏற்படுத்திய அன்ஷிதா, சௌந்தர்யா பெற்றோர்.. நெகிழ்ச்சி தருணம்..!

நமக்கு புரிந்தது, அவுங்களுக்கு புரிந்ததா?

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசுகையில், "விளையாட்டு என்பது வீட்டில் இருப்போர் அவர்களுக்குள் விளையாடுவது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த தகவல் நமக்கு புரிந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்களுக்கு புரிந்ததா? என்பது தெரியவில்லை. விசாரிப்போம்" என கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் கூறியதை வீட்டில் இருக்கும் நபர்களில் சிலர் தவறாக புரிந்துகொண்டதை உணர்த்துகிறது என சொல்ல வரும் விஜய் சேதுபதி, அதுகுறித்த ஆலோசனைகளை போட்டியாளர்களுக்கு அறிவுரையாக வழங்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: "நீதான் என்னோட ஹீரோ" - அருணிடம் அன்பை பொழிந்த அர்ச்சனா ரவி.. வைரல் ப்ரோமோ இதோ.! 

போட்டியாளர்களிடம் பெற்றோர்கள் & நண்பர்களின் அறிவுரை விளங்கியதா? என வினவப்போகும் விஜய் சேதுபதி: