Allu Arjun Arrested: அல்லு அர்ஜுன் திடீர் கைது.. வீட்டிலிருந்தவரை இழுத்து செல்ல காரணம் என்ன?!

புஷ்பா 2 தி ரூல் பட நாயகன் அல்லு அர்ஜுன், இன்று ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Allu Arjun (Photo Credit @TV9Telugu X Facebook)

டிசம்பர் 13, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டு இருந்தார். ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது.

முதல் நாளில் ரூ.294 கோடி வசூல்:

இதனையடுத்து, படத்தின் புஷ்பா இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியானது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது. உலகளவில் படத்தின் வெளியீடுக்கு முன்னதாகவே, ப்ரீபிக்கிங் முறையில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது இருந்தது. தற்போது உலக அளவில் ஆயிரம் கோடியை தாண்டி சென்றுள்ளது. Chikitu Vibe: ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. டி. ராஜேந்தர் குரலில் மாஸ் பாடல்.. Chikitu Vibe கிலிம்ப்ஸ் வீடியோ வைரல்..!

அல்லு அர்ஜுன் கைது:

இதற்கிடையே டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா படம் பார்க்க ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுனை அருகில் பார்த்துவிடவேண்டும் என நெரிசல் அதிகமானது. இதனால் படம் பார்க்க வந்த ரசிகை ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவருடைய குழந்தைகளும் நெரிசலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இச்சம்பவத்திற்காக அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் அளித்தார். ஆனால் அந்தப் பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் இன்று ஐதராபாத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். இது விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார்களா? அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா? என அதிகாரப்பூர்வமாக ஏந்தத் தகவலும் வரவில்லை.

அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட வீடியோ: